திருக்கோவிலூரை சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் கால்களை உடைத்து காவலாளி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரமான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை இழந்த சிறுமி குடும்ப வறுமையின் காரணமாக விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த சூழலில் இப்படியொரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
முகத்தை மூடி கொடூரம்
ஞாயிற்று கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் மாணவிகள் பலரும் ஊருக்குச் சென்றுள்ளனர். இந்த சிறுமி மட்டும் விடுதியில் தங்கியுள்ளார். விடுதியில் தனியாக படுத்திருந்த சிறுமியின் முகத்தை மூடி காவலாளி பாலியல் வன்ககொடுமை செய்துள்ளனர். தப்பித்து ஓட முயன்ற போது சிறுமியை கீழே தள்ளி கால்களை உடைத்து பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுமியின் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல்களில் காயங்களோடு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவலாளி கைது
இச்சம்பவத்தை தொடர்ந்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்தது. பின்னர், சிறுமியின் இரண்டு கால்களும் உடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேரடியாக காவலாளிகளை அழைத்து சென்று சிறுமியிடம் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதில், காவலாளி மேத்யூ என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்திற்கு பின்பு மாணவிகளை காண பெற்றோர் குவிந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் கொலை கொள்ளை சம்பவம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது. பகல் நேரங்களில் கூட பொதுமக்கள் தனியாக செல்ல அஞ்சும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் நடந்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
திட்டமிட்டு படுகொலை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு படுகொலை நடக்காத நாளே இல்லை. தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. சிறுமி முதல் வயதான பெண்கள் வர பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள். பெண்களின் நிலையும் மோசமாக இருப்பதாகவும் அண்புமனி குற்றம்சுமத்தினார். தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை தொடர்பான சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என்றும் அன்புமணி புகார் தெரிவித்தார்.