திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தில் இருந்து தம்மம் பட்டி செல்லும் பிரதான சாலையில் நாகநல்லூருக்கும், தளுகைக்கும் இடையே அமைந்துள்ளது கொங்கு செட்டிக்காடு மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் வந்து தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.  வெள்ளிக்கிழமை பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி ராஜேந்திரன், கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வேளையில் கோவில் திறந்து கிடந்தது கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு, பிரபாகர் ஆகியோர் போலீசாருடன் சென்று விசாரணை மேற் கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நள்ளிரவில், பிரதான சாலையில் ஆள்நடமாட்டமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கோவில் கேட் மற்றும் இரு கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர்.

 



 

இதனை தொடர்ந்து  உள்ளே புகுந்த அவர்கள் உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த ரொக் கப்பணம் மற்றும் காணிக்கைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. வருடத்திற்கு ஒருமுறை இக்கோவில் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவில் திறக்கப்பட்டு, உண்டியல் காணிக்கைகள் எடுக்கப்பட்டதன் பேரில் மீண்டும் உண்டியல் பூட்டப்பட்டது. கடந்த 9 மாத உண்டியல் வருமானம் சுமார் ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித் துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, திருடு போனது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.