வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாதவன் (வயது 27) என்பவர், கடந்த ஜூன் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது, சிறுமி பயங்கரமாக அலறி கத்தியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மாதவனிடமிருந்து சிறுமியை மீட்டனர். பின்னர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதவனை பிடித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் படிக்க: POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?


இந்த சம்பவம் தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்துள்ளார்.மேலும் படிக்க: Telengana | 'வேலை வாங்கி தர்றோம்’ - கூட்டுப் பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிய கொடூரர்கள்..


குற்றம்சாட்டப்பட்ட மாதவனுக்கு பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும், அபராதத்தைக் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சிறுமியை அடித்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி சிறை பிடித்து வைத்த குற்றத்துக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும் படிக்க: Explainer: படிக்க அனுப்புறோம்.. உசுரக் கொடுக்க அல்ல.. பாலியல் வன்முறைக் களமாகும் பள்ளிகள்...காரணம் என்ன?


மேலும், மாதவனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண