உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். இந்த  கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தருகிறார். இந்த மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இங்கு கிரிவலம் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் பகுதிளில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.  இதுமட்டுமின்றி கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி வசித்து வருகின்றனர். தற்போது திடிரென பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காவிவேட்டியை கட்டிக்கொண்டு தங்கியுள்ளனர். இவர்களில் ஒருசிலர் கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகின்றது. மேலும் புகார் வரும் சமயங்களில் காவல்துறையினர் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தி கஞ்சா வைத்திருப்பவர்களை பிடித்து வருகின்றனர். இருந்தபோதிலும் கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது என்றும் மலை சுற்ற வரும் ஆன்மீக பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


 




 


இந்த நிலையில் காவி வேட்டி அணிந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை அருகில் கஞ்சா போதையில் நடைபாதையில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த நபர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த கஞ்சா அடித்த நபர் அவர்களை தகாத வார்த்தையால் பேசினார். அங்கிருந்த ‌பக்தர்கள்  அந்த நபரை பிடித்து கை மற்றும் கால்களை கயிறால் கட்டிப் போட்டனர். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை பிடித்து கட்டி போட்டவர்களையும், பொதுமக்களையும், கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் வசைபாடி, நையப் புடைத்தார்கள்.  மேலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பக்தர்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்தவர்களே கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து விட்டனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.


 


 




 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் மத்திய பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுப்பட்டார்.  கிரிவலப்பாதையில் லாரி ஓட்டுநர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அதனைதொடர்ந்து  காவி வேட்டி கட்டிய வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் கடைகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிவலப்பாதையில் காவல்துறையினரின் கிரிவல ரோந்து ‌வாகனம் தொடர்ந்து ரோந்தில் ‌உள்ளது. இதுமட்டுமின்றி 2 கிலோமீட்டருக்கு ‌இருசக்கர வாகனத்தின் மூலம் காவல்துறையினர் ரோந்தில் உள்ளனர். இதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் தாலுக்கா காவல் நிலையம் அமைந்துள்ளது. இவைகள் அனைத்தும் இருந்த போதும் கிரிவலப் பாதையில் கஞ்சாவின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்றும் அதனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கிரிவல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.