குளித்தலையில் ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது.


 





குளித்தலையில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம்  3 பவுன் தங்க செயினை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்து திருச்சி மகளிர் அணி சிறையில் அடைத்தனர்.


திருச்சி மாவட்டம் முசிறி புது கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து  மனைவி அகிலம்மாள் (52). இவர் நேற்று முன்தினம் குளித்தலை அரசு பொது மருத்துவமனையில் இந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு அய்யர்மலை செல்வதற்காக குளித்தலை சுங்கக் கேட்டில் இருந்து பஸ்ஸில் ஏறி  உள்ளார். அதன் பிறகு அய்யர்மலை நிறுத்தம் வந்த பிறகு இறங்கி பார்த்தபோது தான் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து உடனடியாக அவருடைய மகள் மற்றும் மருமகனுக்கு தகவல் அளித்துவிட்டு யாரோ திருடி இருக்கலாம் என்று குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இரண்டு மணி நேரத்தில்  சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் திருவண்ணாமலை செங்கம்  குட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் மனைவி காவிரி மற்றும் சோலையம்மாள் ஆகியோர் என்பதும், அவர்கள் தான் அகிலம்மாளிடம் தங்கச் சங்கிலியை திருடியது தெரிய வந்தது.
   
     




அதை அடுத்து காவிரி சோலையம்மாள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.




பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது.


கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனி கடைவீதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் குளித்தலை சப்- இன்ஸ்பெக்டர் ரூபினி போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அப்பொழுது நெய்தலூர் காலனி நிற்குப்பட்டியைச் சேர்ந்த ஆதகாலன் மகன் சிவா, தெற்கு மேடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மாணிக்கம், நெய்தலூர் காலனி குருனிக்காரன் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் முருகன் ஆகிய மூன்று பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து  52 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். க. பரமத்தி அடுத்துள்ள தென்னிலை அருகே அம்மாபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தென்னிலை போலீசார் அந்த பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.அப்போது அங்கு அம்மாபட்டியை சேர்ந்த சண்முகம், மேலும் காருடைய முத்துசாமி ஆகிய இரண்டு பேர் பணம் வைத்து சூராடிக் கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக இரண்டு பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இரண்டு பேரிடம் இருந்து ரூ 7,200 ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.




 


பள்ளி மாணவி மாயம்.


கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லை ஊராட்சி கல்லை காலணியைச் சேர்ந்த ரத்தினவேல் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ரத்தினவேல் இறந்து விட்டதால் தாய்மாரியம்மாள் கவனித்து வந்தார். மாரியம்மாள் கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வேலை முடிந்து மாரியம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதனால் தோகைமலை காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் அளித்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து தோகமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாயமான மாணவியை தேடி வருகிறார்.