விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதாஸ் வயது 31. இவர் அவரது கிராமத்தில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டிவனம் பகுதியில் செஞ்சி சாலையில் உள்ள எட்டியம்மாள் பைனான்ஸ் நடத்திவரும் ஊரல் கிராமத்தை சேர்ந்த ரவி 52 வயது என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் 6 பைசா வட்டிக்கு கடன் பெற்று, இந்நாள்வரை சுமார் 8 லட்சம் ரூபாய் வட்டி கட்டி உள்ளார்.


OPS Photo Removed : ஓபிஎஸ் பெயர்,புகைப்படம் அழிப்பு.. ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்! CV Shanmugam


இந்நிலையில், ரவி அடியாட்களை வைத்து கவிதாஸை 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கவிதாஸ் திண்டிவனம் ஏடிஎஸ்பி அபிசேக் குப்தாவிடம் கடந்த 23ம் தேதி புகார் அளித்தார். இதனடிப்படையில் இன்று ஏடிஎஸ்பி அபிசேக் குப்தா தலைமையில் போலீசார்  எட்டியம்மாள் பைனான்சியர் ரவி அலுவலகத்தை உடைத்து சோதனை நடத்த வந்திருந்தனர். இதனை அறிந்த ரவியின் வழக்கறிஞர் அலுவலக பூட்டை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Crime : தாயுடன் உறவில் இருந்தவர் மீது ஆத்திரம்.. இளைஞர் செய்த வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்..


பின்னர் நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட சோதனை ஆணையை காண்பித்து வழக்கறிஞரை சமாதானம் செய்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக வட்டி லாபத்திற்கு கந்து வட்டி விடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், ரவி மீது வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண