துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை வந்தது.அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக ஹைதராபாத் செல்ல தயாரானது. இண்டிகோ ஏா்லைன்ஸ் லோடா்கள் விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தினா். விமானத்தின் கழிவயையை சுத்தம் செய்தபோது, அங்குள்ள தண்ணீா் தொட்டிக்குள் கறுப்பு கலா் பாா்சல் ஒன்று கிடந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் மெட்டல் டிடக்டருடன் விரைந்து வந்து சோதனையிட்டனா். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.



இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பாா்சலை பிரித்து பாா்த்தனா். அதனுள் 12 தங்கக்கட்டிகள் இருந்தன.இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா் .அவா்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். 12 தங்கக்கட்டிகளின் எடை 702 கிராம்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.30,85,290. துபாயிலிருந்து கடத்தி வந்து,விமான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, தலைமறைவான கடத்தல் ஆசாமியை தேடுகின்றனா்.




இதையடுத்து சென்னை சா்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள ஒரு கழிவறையை இன்று காலை விமானநிலைய தூய்மை பணியாளா்கள் சுத்தம் செய்தனா். அங்குள்ள குப்பை கூடையில் உள்ளாடையில் சுற்றிய ஒரு பாா்சல் கிடந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனையிட்டனா். அதில் தங்கப்பசை உருண்டை இருந்ததை கண்டுப்பிடித்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா். அவா்கள் நடத்திய விசாரணையில் 2.52 கிலோ எடையுடைய தங்கப்பசை இருந்தது.அதன் சா்வதேச மதிப்பு ரூ.1.11 கோடி. இதையடுத்து இந்த தங்கப்பசையையும்  சுங்கத்துறை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.



சென்னை சா்வதேச விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் துபாய் விமான கழிவறை,விமான நிலைய கழிவறை இரு இடங்களில் மறைத்து வைத்திருந்த ரூ.141 கோடி மதிப்புடைய 3.222 கிலோ தங்கத்தை சுங்கத்துறை கைப்பற்றி விசாரணை நடத்துவதோடு, கடத்தல் ஆசாமிகளை தேடி வருகின்றனா்.