விளாத்திகுளம் அருகே பேரூராட்சி மன்ற தலைவர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற ஒப்பந்த தூய்மை பணியாளர் - வி.புதூர் பேரூராட்சி மன்ற தலைவி மீது பாய்ந்தது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.புதூர் பேரூராட்சியில் GREEN TRUST என்ற நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 27 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளப் பணம் போதுமானதாக இல்லை எனக் கூறி தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவி வனிதா மற்றும் செயல் அலுவலரிடம் சம்பளத்தை உயர்த்தி தரும்படியும் அல்லது தங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.




இதனை ஏற்க மறுத்தது மட்டுமன்றி இந்த கோரிக்கையை கொண்டு சென்ற நாளிலிருந்து, பேரூராட்சி மன்ற தலைவியின் தூண்டுதலின் பேரில், அலுவலகத்தில் GREEN TRUST நிறுவனத்தின் ஒப்பந்த மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் அழகர்சாமி என்பவர் இங்கு துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் அதிக நேரம் வேலை வாங்கியதாகவும் ஒருமையில் பேசி திட்டுவது என்பதை தொடர்ச்சியாக கொண்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.




அதுமட்டுமின்றி வி.புதூர் பேரூராட்சி மன்றத் தலைவி வனிதாவின் தோட்டத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த மேற்பார்வையாளர் அழகர் சாமி கட்டாயப்படுத்தியதாகவும், அதனை செய்ய மறுத்த தூய்மை பணியாளர் கருப்பசாமி என்பவரை பேரூராட்சி மன்ற தலைவி வனிதா, அவதூறாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதையெடுத்து மனமடைந்த கருப்பசாமி எறும்பு சாக்பீசை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் துப்புரவு பணியாளர் கருப்பசாமியின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரியின் பேரில், இதனை விசாரித்த புதூர் காவல் நிலைய போலீசார் பேரூராட்சி மன்ற தலைவி வனிதா மற்றும் GREEN TRUST ஒப்பந்த மேற்பார்வையாளர் அழகர்சாமி ஆகிய இருவர் மீது IPC 294(b), SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(r) மற்றும் 3(1)(s) என 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.