நாகப்பட்டினம் மாவட்டம்  திருவெண்காடு அருகில் உள்ள மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா வயது 24. இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள அன்னபூர்ணா பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் நன்னிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து கிளம்பி தோழியுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்று உள்ளார். தொடர்ந்து அர்ச்சனாவின் தோழி மதிய உணவு இடைவேளைக்காக விட்டிற்கு சென்று பார்த்த போது அர்ச்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தொக்கியபடி இருந்துள்ளார். 

 

இதனையடுத்து  நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன் அர்ச்சனாவின் செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

 

இந்த நிலையில்  நாகப்பட்டிணம் மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் காதலன் சத்யராஜ் வயது 26 என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் விசாரணையில் சத்யராஜ் கடந்த இரண்டு வருடமாக அர்ச்சனாவை காதலித்து வந்துள்ளார் என்பதும் மேலும் சத்யராஜுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்யராஜ் அர்ச்சனா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அர்ச்சனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 45 நிமிடம் சத்யராஜுடன் அவர் செல்போனில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் சத்யராஜ் நீ தொலைந்து விடு என்று கூறியதாகவும் மேலும்  வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு அர்ச்சனா தொலைந்து போக சொல்லிவிட்டு பிறகு வீடியோ கால் எதற்கு என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து வீடியோ கால் வந்த சத்யராஜ் அர்ச்சனா தூக்கு போடுவதை பார்த்து ரசித்துள்ளார். மேலும் தூக்கு மாட்டுவதற்கு முன்பு எனக்கு டாட்டா காட்டிவிட்டு மாட்டிக்கொள் என்று ஈவு இறக்கம் இல்லாமல் சத்யராஜ் கூறியதாக காவல்துறையினர் அர்ச்சனாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சத்யராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.