திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் 3 அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த இரண்டு பேருந்துகள் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி செல்வதற்காக நின்று கொண்டிருந்தது. அதேபோன்று மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்சர் வாகனத்தில் வந்த இருவர் அடுத்தடுத்து மூன்று அரசு பேருந்து கண்ணாடியில் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர். பல்சர் வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர் ஹெல்மட் அணிந்து இருந்ததாகவும், பின்னால் அமர்ந்திருந்தவன் பை ஒன்றில் கற்களை எடுத்து வந்து முதலில் ஒரு பேருந்து கண்ணாடி மீது எரிந்ததாகவும் அது சேதம் அடையாத காரணத்தினால் அருகில் இருந்த மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பின் கண்ணாடியில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் அந்த பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுமையாக உடைந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து மன்னார்குடிக்கு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மன்னார்குடி செல்வதற்காக பயணிகளை ஏற்றி கொண்டு நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளையும் கற்களை வீசி அந்த மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதில் ஒரு பேருந்தின் முன்பக்க கண்ணாடியும், மற்றொரு பேருந்தின் பின்பக்க கண்ணடியும் முழுமையாக உடைந்து நொறுக்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வருகை தந்து புதிய பேருந்து நிலையத்தின் ஒரு கடையில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தார். மொத்தம் மூன்று வண்டிகளில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அரசு பேருந்து தாக்கிய மர்ம நபர்கள் யார் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது எனவும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் என்னும் இதனால் பயணிகளுக்கும் அங்கு கடை வைத்திருப்பவர்களுக்கும் அரசு பேருந்துகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் எனவே இரவு நேரங்களில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் உரிய பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் எனவும்,காவல்துறை சார்பில் சிசிடிவி காமிராக்களை பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பேதிய இடவசதி இல்லாத காரணத்தினால் இருசக்கர வாகனங்களும் கனரக வாகனங்களும் பேருந்து நிலைய வளாகத்திற்குள் நுழைந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு இந்த கட்டுமானப் பணிகள் முடிந்து திருவாரூர் புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது. திருவாரூர் புதிய பேருந்து நிலையம் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருக்கிறது என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கஞ்சா மற்றும் மது அருந்து ஊரில் புகலிடமாகவும் விளங்குவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் சிசிடிவி கேமிராக்களை வைத்து 24 மணி நேரமும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்காத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.