கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்கள் சிங்காரப்பேட்டையில் நடைபெறும் திருமணத்திற்கு செல்வதற்கு திருவண்ணாமலை அருகில் உள்ள பாவப்பட்டு கிராமத்தில் வசிக்கும் உறவினர்கள் இருவரை அழைத்துக்கொண்டு மொத்தம் 7 நபர்கள் சொகுசு காரில் சிங்காரப்பேட்டைக்கு சென்றனர். திருவண்ணாமலை செங்கம் சாலையில் கிரிவலப்பாதை சந்திப்பில் சொகுசு கார் வரும்பொழுது செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரியும் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி சென்ற சொகுசு காரும்  மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாகா சொகுசு கார் நொருங்கி. காரில் பயணம் செய்த ஓட்டுனர் பாலன் மற்றும் வனஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்து சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ள நபர்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் உடனடியாக சொகுசு காரில் பயணம் செய்த நபர்களை காப்பற்ற முயற்சி செய்தனர்.  படுகாயம் அடைந்த லோகநாதன், கல்பனா, சுதா, சித்ரா உள்ளிட்ட 5 நபர்களையும் பொதுமக்கள் உதவியுடன் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கிராமிய காவல்நிலையத்தின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த இரண்டு பிரேதங்களையும் கைப்பற்றி அதனை திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக்கா அனுப்பி ‌வைத்தனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - Chennai: சென்னையில் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு..



இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இதில் சித்ரா என்ற பெண்மணி கவலைக்கிடமாக திருவண்ணாமலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சித்ராவை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்லன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கோர விபத்து குறித்து லாரியின் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ‌ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். உறவினர் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகி இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - Watch Video: மெட்ரோ அடுக்கு மாடியில் இருந்து குதித்த இளம்பெண்...! துரிதமாக காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்கள் - வைரல் வீடியோ !