டெல்லியிலுள்ள அக்‌ஷர்தம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை திடீரென இளம் பெண் ஒருவர் மாடிக்கு சென்றுள்ளார். அங்கு ஓரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பார்த்த சிஐஎஸ்.எஃப் வீரர் மெட்ரோ நிலையத்தில் பணியிலிருந்த மற்றவர்களுக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலை தொடர்ந்து சிஐஎஸ்.எஃப் வீரர்கள் மற்றும் மெட்ரோ ஊழியர்கள் அந்தப் பெண்ணை கீழே குதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். 


 


இருப்பினும் அந்தப் பெண் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து சிஐஎஸ்.எஃப் வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அருகே இருந்து ஒரு பெட்ஷீட்டை எடுத்து வந்துள்ளனர். அந்த பெட்ஷீட்டை கீழே விரித்து அப்பெண் குதித்த போது அவர்கள் பிடித்துள்ளனர். இதன்காரணமாக அப்பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருடைய வலது காலில் லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டெல்லி லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


 






இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவை சிஐஎஸ்.எஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,”சிஐஎஸ்.எஃப் வீரர்கள் எடுத்த துரித நடவடிக்கையால் ஒரு இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் சிஐஎஸ்.எஃப் வீரர்களை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய வேலையை விட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் எதற்காக மெட்ரோ மாடியிலிருந்து குதித்தார் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் படிக்க: "லவ் ஜிகாத் என்ற வார்த்தையே தவறு": விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை! ஜகா வாங்கிய DYFI!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண