திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலனுக்கு (49) ரம்பா (43) என்ற மனைவியும், 11ஆம் வகுப்பு படிக்கும் தேவிப்பிரியா ம்ற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் சரன்செல்வா மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவபாலன் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். மேலும் அவருடைய மகள் மற்றும் மகன் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 8ஆம் தேதி இரவு சிவபாலனின் மகள் தேவிப்பிரியா வீட்டில் வாயில் நுறைதள்ளி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சோபாவில் மயங்கியபடி இருந்து உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் ரம்பா உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இருந்த மருத்துவர்கள் இங்கு சிகிச்சை அளிக்கபட முடியவில்லை என்று கூறி உள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது தேவிபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தேவிப்பிரியா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மேலும் இந்த சம்பவம் குறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முதன்தினம் வீட்டில் இருந்து சென்ற தந்தை சிவபாலன் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். நேற்று மாலை மாணவியின் உடல் அடக்கம் செய்ய ஏற்ப்பாடுகள் நடைபெற்று வந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மணலூர் பேட்டை சாலையில் உள்ள கண்ணமடை காட்டில் தந்தை சிவபாலன் இரண்டு கை மணிக்கட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், விஷம் அருந்தியும் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனைவி ரம்பா தச்சம்பட்டு காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் இறந்த ஆசிரியர் சிவபாலன் உடலை கைபற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அடுத்தடுத்து மகள் மற்றும் தந்தை தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவிக்கையில்:- காப்புகாட்டில் மீட்ட எடுக்கப்பட்ட சிவபாலன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் கொலை செய்தார்களா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே சிவபாலன் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும். மேலும் சிவபாலனின் மகள் தேவிபிரியா வீட்டில் நுரை தள்ளியபடி மர்ம முறையில் இறந்துள்ளார். தேவிபிரியா உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது பிரேத பரிசோதனை முடிவுகள் ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
மனைவி ரம்பை தற்போது இருக்கும் நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. மேலும் அவரது 12 வயது மகனிடமும் விசாரணை நடத்த முடியவில்லை. இந்த வழக்கில் பல மர்மங்கள் உள்ளதால், பிரேத பரிசோதனை வந்த பிறகே இருவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். மகள் மற்றும் தந்தை தற்கொலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.