திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 ஏ டி எம் மையங்களில் 72 லட்சத்தி 79 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையிலான நான்கு எஸ் பி உள்ளிட்ட ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா ஆந்திரா அரியானா போன்ற மாநிலங்களில் கடந்த ஐந்து நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


நீதிபதி முன்பு ஆஜர்


இது தொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் ஆரீப், மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் ஹரியானாவில் தனி படை போலீசார் கைது செய்து டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அதிகாலை அழைத்து வந்தனர்.


இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் விசாரணைக்காக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகம் முன்பு ஆரீப் மற்றும் ஆசாத் இருவரையும் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.