தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று நடைபெறுகிறது - பூத் சிலிப்பும் இன்றே வழங்கப்படும் என தேர்தல் அலுவலர் பேட்டி
- திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - எது கிடைக்காவிட்டாலும் கஞ்சா தாராளமாக கிடைப்பதாக புகார்
- அமைச்சர் குளித்துக் கொண்டிருந்தாலும் அரசுப்பணிகள் நடக்கும் - தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் ஈடுபடுவது குறித்த அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில்
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசுப்பள்ளி மாணவர்களை அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் சென்ற தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்
- கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு - வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கூறி ஆர்ப்பாட்டம்
- கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூட்டில் மீனவர் உயிரிழந்த விவகாரம் - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
- குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றப் பின் முதல்முறையாக திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை - மதுரை, கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை - 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு, பக்தர்கள் வழக்கம்போல சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த 2 பேர் கைது - இருவரும் விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார்
இந்தியா:
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது, பான்மசாலா, குட்கா வணிகத்தில் வரி ஏய்ப்பை தடுப்பது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு
- மேகதாது திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம் - உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள தமிழ்நாடு அரசுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் பேச்சு
- கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான ஈரப்பத வரம்பு 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்பு என தகவல்
- அதானி குழுமம் குறித்து ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறிய புகார் - ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரனை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
- டிஜிட்டல், ரேடியோ என பல மொழிகளில் வெளியான பிபிசி செய்திகளை கணக்கிடுவதில் விதிமீறல்கள் - டெல்லி பிபிசி
அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமானவரித்துறை விளக்கம் - சிவசேனா கட்சியின் பெயரும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- சிவசேனா கட்சியின் பெயரும், வில் அம்பு சின்னமும் போனாலும் கவலையில்லை - உத்தவ் தாக்கரே ஆதரவாளர் சஞ்சய் ராவத் கருத்து
உலகம்:
- துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரம் ஆக உயர்வு
- இங்கிலாந்தில் 16 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 3.3 அடி நீளம் கொண்ட டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு
விளையாட்டு:
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட்
- அணியின் உள்விவகாரங்கள் குறித்து சர்ச்சை பேச்சு - இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த சேத்தன் ஷர்மா