திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரியில் உள்ள எல்லையம்மன் கோவில் வளாகத்தில் வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக ஆரணி டவுன் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வாலிபர் தலையில் அடிபட்டு இறந்து கிடந்து தெரிய வந்தது. மேலும் காவல் துறையினர் விசாரணையில் இறந்தது ஆரணி டவுன் கொசப்பாளையம் பங்காள தெருவை சேர்ந்த முருகேசன்-சாந்தி தம்பதியனரின் மகன் பாம்பு (எ) யுவராஜ் (30) என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதில் யுவராஜ் அவரது நண்பர்களான டாக்டர் என்கிற தணிகைவேல், ஜீவா, இளங்கோவன்  ஆகிய  இவர்கள் 4 நபர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 



இதில் டாக்டர் (எ) தணிகைவேல் என்பவர் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் கந்து வட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று சென்னைக்கு சென்றுள்ளார். இதனால் பணத்தை கொடுத்த தினேஷ் என்பவர் தணிகைவேலின் நண்பர்களான பாம்பு (எ) யுவராஜ் மற்றும் விஜி ஆகியோரிடம் தணிகைவேலின் முகவரியை கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். அதன் பின்னர் தினேஷ் என்பவர் சென்னைக்கு சென்று பணத்தை கேட்டு தணிகை வேலிடம் வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் (எ) தினேஷ் என்பவர் ஆரணிக்கு 3 தினங்களுக்கு முன் வருகை புரிந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாம்பு (எ) யுவராஜ் மற்றும் ஜீவா ஆகியோரிடம் பாரதியார் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.



இதனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தணிகைவேல், ஜீவா, யுவராஜ் ஆகியோரை அப்புறபடுத்தினார்கள்.  மேலும் அதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு திருமலை சமுத்திரம் ஏரியில் உள்ள எல்லையம்மன் கோவில் வளாகம் அருகில் மது அருந்தியுள்ள யுவராஜிடம்  அப்போது அந்த இடத்தில் வந்த டாக்டர் (எ) தணிகைவேல் இவர்கள் இருவருக்கும் மீண்டும் யுவராஜ் ஆகியோருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் தணிகைவேல் ஆத்திரத்தில் அருகில் இருந்த கல்லை கொண்டு கடுமையாக யுவராஜை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த யுவராஜ் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் தணிகைவேல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி ஓட்டார். திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் மியா வரவழைக்கபட்டு சம்பவடத்தில் இருந்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் ஓடி டாக்டர்  தணிகைவேல் வீடு வரையில் சென்று நின்றது. 



இதனால் காவல்துறைக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் தணிகை வேலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நடந்த சம்பவத்தை பற்றியும் கந்து வட்டி காரரிடம் தன்னை சிக்க வைத்தால் தான் ஆத்திரத்தில் நான் கொலை செய்தேன் என்றும் குற்றத்தை ஒப்பு கொண்டார். அதன் பின்பு தணிகை வேல் மீது காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆரணியில் கந்து வட்டி நபரிடம் தன்னை சிக்க வைத்த நண்பனை ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.