திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள எம் ஆர்டி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் வயது  (37). இவர் திருவண்ணாமலை பிஎஸ் என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா வயது (33). இவர்களுக்கு திருமணமாகி  ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருவண்ணாமலையில் பிரபல மாண தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். 


இந்நிலையில்,காலையில்  கிருஷ்ணகுமார் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு நூக்காம்பாடி அருகே ராந்தம் கிராமத்தில் உள்ள அவருடைய நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு சுமார் மதியம் 2 மணியளவில் வந்தனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவையும் உடைத்த மர்ம ஆசாமிகள் அதிலிருந்து தங்க நகைகள், வெள்ளிபொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.


 


 




 


இதுகுறித்து, கிருஷ்ணகுமார் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் வீட்டை சோதனையிட்டு விசாரணை நடத்தினர். அதில் இருந்த 31 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.


மேலும் துணியில் மறைந்திருந்த 27 சவரன் நகைகள் திருட்டு கும்பல் கண்ணில் படாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடிச்சென்றவர்கள் எதாவது தடயங்கள் விட்டு சென்றுள்ளார்களா என கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.


 


சைவ மதம் ஒயின்ஷாப்ல நிற்பது பெருமையா? சீமானை சீண்டிய அமீர் | Director Ameer Interview | Seeman | RSS




 


Watch Video | Biggboss Tamil 5 | இது Mind கேம்.. இதுல செண்டிமெண்ட்..நல்லதுகெட்டதுல்லாம் கிடையாது - அபிஷேக் வைத்த குண்டு


 


இது குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  பட்டப்பகலில் வீட்டின் கதவினை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றமர்ம ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய 2 மணி நேரத்திற்குள் கொள்ளை கும்பல் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மன்னிச்சுருங்க..தமிழில் அறிக்கை! பணிந்த சொமேட்டோ! Reject Zomato | Zomato Issue | Zomato Apology