காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் முன்னாள் அ .ம. மு. க மாவட்ட செயலாளர் தர்பாராண்யம், கந்துவட்டி தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் மாவட்டம் அடுத்த திருநள்ளாறு தெற்கு பேட் தேனூரைச் சேர்ந்தவர் தர்பாராண்யம் (வயது52). இவர் காரைக்கால் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளராக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் வேட்பாளராக நின்றார். மேலும், கட்சியில் பல லட்சம் செலவும் செய்து இருந்ததால் பெரும் கடனுக்கு உள்ளானார். இதனால் வேட்பாளராக இருந்த நிலையில் திடீரென்று அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அதிலும், அதிகப்படியான கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தினசரி கடன் கொடுத்தவர்கள், தர்பாராண்யத்திற்கு போன் செய்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேரில் வந்து வீட்டில் உள்ள பெண்களை இழிவுபடுத்தி பேசி கடன்காரர்கள் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தர்பாரண்யம் வீட்டு அறையில் மின்விசிறியில் மின் ஒயர் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அவரது மனைவி இளவரசி அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசாரை அழைத்து உடலை இறக்கி சோதனை செய்ததில், அவரது பாக்கெட்டில் 14 பக்கம் கடிதம் சிக்கியது. அதனை அடுத்து போலீசார் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இளவரசி இது குறித்து திருநள்ளாறு காவல்நிலையத்தில் கந்துவட்டி கொடுமையால் தான் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றிய கடிதத்தையும் ஆய்வு செய்த போலீசார் அதில் கந்து வட்டியால் தான் தான் தற்கொலை செய்து கொண்டு உள்ளேன் என்றும் எழுதிவைத்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் கந்துவெட்டியால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரைக்கால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்