தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் கடந்த ஜூன் இரண்டாம் தேதி, மூன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது  சிறுமி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை விளையாடலாம் என அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த பின், சிறுமியின் ஆடையில் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் விஜயகுமார் என்பவரை சின்னமனூர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Nithyananda LIVE: இனி நீங்க புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புதிய கைலாசாவை பாப்பீங்க... அதிரடியாக அறிவித்தார்!




இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்யும் நோக்கில் தீ வைத்து எரித்த விஜயகுமார் என்ற இளைஞரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த பின்பு ஒரு மாதத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை குற்றப்பத்திரிக்கையாக தேனி மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


Ramadoss Covid 19:நேற்று முதல் தொண்டை வலி: பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா தொற்று உறுதி




இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் துன்புறுத்தலுக்கு பின் கொலை செய்யும் நோக்கோடு தீவைத்ததால் 75% தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமிக்கு மூன்று லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்டதோடு அதில் ஒரு லட்ச ரூபாய் உடனடியாக வழங்கவும் மீதமுள்ள 2 லட்ச ரூபாயை இரண்டு மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என தேனி மாவட்டமகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண