Nithyananda LIVE: இனி நீங்க புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புதிய கைலாசாவை பாப்பீங்க... அதிரடியாக அறிவித்தார்!

Nithyananda LIVE Updates: மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நித்தியானந்தா தனது யூடியூப்பில் லைவ் வருகிறார். அது குறித்தான அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.

கண்ணன் Last Updated: 13 Jul 2022 10:45 PM
இன்னும் என் சமாதி நிலை முடியவில்லை

நீங்கள் செய்த அனைத்து நல்ல விஷயங்களுக்கும் நன்றி. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பரமஷிய யோகத்தை தள்ளி வைத்தற்கு காரணம் இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. உங்களின் பொறுமைக்கு நன்றி.

அடுத்த அமாவாசையில் லெவல் 3 தொடங்கும்

அடுத்த அமாவாசையில் பரமஷிய யோகம் லெவல் 3 தொடங்க இருக்கிறோம்.

நிச்சயம் தமிழில் பேசுகிறேன்

மனம் தற்காலிகமானது. யாராவது நான் தமிழில் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா..  நான் நிச்சயம் இன்னும் சில நிமிடங்களில் தமிழில் பேசுகிறேன்.

உடல் அழியும் போது வாழ்வு வீணாகி போகிறது- நித்தி

நன்றாக புரிந்து கொள்ளுங்கள், மனம் அதிக முறை உயிரிழக்கும் போது, அதுதான் நீங்கள் உங்களது உடலை சரியாக பயன்படுத்தும் முறையாக இருக்கிறது. மாறாக, ஒரே மனம் இருந்து, உடல் அதிக முறை அழியும் போது, உங்களது வாழ்வு வீணாகி போகிறது.

தமிழில் பேச போவதாக நித்யானந்தா அறிவிப்பு

இதுவரை ஆங்கிலத்தில் ஆசி வழங்கி வந்த நித்யானந்தா, தற்போது தமிழில் பேசப் போவதாக அறிவித்துள்ளார்

புரிதல் கொண்ட நபராக மாறுகிறீர்கள்

அதற்கு என்ன அர்த்தம் என்றால், உங்களுக்குள் இறப்பு நிகழ்ந்து, நீங்கள் அதிக புரிதல் கொண்ட நபராக மாறுகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையின் புதிய பார்வை திறக்கிறது

ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னுடைய பகவத் கீதா கமெண்ரியை கேட்டு முடித்த பின்னர், உங்களுக்கு வாழ்கை குறித்தான புதிய பார்வை திறக்கிறது.

வெவ்வேறு வாழ்வை ஒரு உடலில் வாழலாம்- நித்யானந்தா

உங்களது மனம் அதிக முறை உயிரிழப்பது உங்களுக்கு மிகவும் நல்லது. காரணம் அப்போழுது நீங்கள் வெவ்வேறு விதமான வாழ்வை, ஒரு உடலில் வாழ முடியும்.

மனம் உயிரிழப்பது உங்களுக்கு நல்லது- நித்தி

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் உடல் இறப்பதற்கு முன்னர், உங்களது மனம் அதிக முறை உயிரிழப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

இறப்பு கூட புரிதல் தரும்- நித்தி

எல்லா அனுபவங்களும் அபபடியே... ஏன் இறப்பு கூட உங்களை அதிக புரிதல் கொண்ட மனிதராக மாற்றும். 

உங்கள் அனுபவங்கள் பலமாகும்- நித்தியானந்தா

நீங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் உங்களை விரிவாக்குவதோடு, பலம் உள்ளவராகவும், அதிக புரிதல் தன்மை கொண்டவராகவும் மாற்றுகிறது. 

அனைத்திலும் மாற்றம் காணப்போகிறீர்கள்

இனி கைலாசாவின் அனைத்து நடவடிக்கையிலும் மாற்றம் இருக்கும். பூஜைகளில், அருளாசிகளில் அனைத்திலும் மாற்றத்தை காணப்போகிறார்கள். -நித்தி

எனது உடல் புதிதாக உள்ளது- நித்தி அறிவிப்பு

நான் மாறவில்லை. எனது உடல் மாறியுள்ளது. புதிதாக எனது உடல் உள்ளது. 

சாவே என்னை பார்த்து பயந்து ஓடும் டா

சாவே என்னை பார்த்து பயந்து ஓடும் டா.... நித்யானந்தா 2.0-வில் நெத்தியடி அறிவிப்பு

உடலும் அனுபவமும்- நித்யானந்தா விளக்கம்

நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு அனுபவமும் உங்களை மேம்படுத்தும். இறக்கும் முன் உடல் பல அனுபவங்களை பெற்று, பல வாழ்க்கையை வாழ்கிறது.

தனது பேச்சில் நீண்ட இடைவெளி எடுக்கும் நித்யானந்தா

நித்யானந்தா தன்னுடைய ஒவ்வொரு பேச்சுக்கும் இடையே நீண்ட ே யாசனை, இடைவெளி விடுகிறார்

இந்து சாஸ்திரங்களில் கவனம் செலுத்தப்படும்

இந்து சாஸ்திரங்களில் இனி கவனம் செலுத்தப்படும். வேதம் மற்றும் ஆகமத்தில் கவனம் செலுத்துவேன். 

மாற்றம் மாற்றம் மாற்றம் என தொடர்ந்து பேசும் நித்யானந்தா

தனது ஒவ்வொரு பேச்சிலும் இனி மாற்றம் இருக்கும், மாற்றம் இருக்கும் என நித்யானந்தா பேசிக் கொண்டே இருக்கிறார்

உலகமே இந்த மாற்றத்தை உணரும்

உலகமே இந்த மாற்றத்தை முழுமையாக உணரும்- நித்தியானந்தா

ஓரிரு நாளில் நீங்களே இந்த மாற்றத்தை உணர்வீர்கள்

இன்னும் சில நாட்களில் , இந்த அப்கிரேட் அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். நீங்களே உணர்வீர்கள், ஓ இறைவா... எல்லாமே மாறிவிட்டதே என்று. 

இன்று முதல் புதியதை பார்ப்பீர்கள்

நீங்கள் இன்றிலிருந்து அப்கிரேட் ஆன புதிய துவக்கத்தை தான் பார்ப்பீர்கள். 

இன்று முதல் புதியதை பார்ப்பீர்கள்

நீங்கள் இன்றிலிருந்து அப்கிரேட் ஆன புதிய துவக்கத்தை தான் பார்ப்பீர்கள். 

ஏப்ரல் 13ல் அனைத்தையும் மறந்துவிட்டேன்

ஏப்ரல் 13 லிங்கோத்பவர் ஒளியாக வந்தார், அதை பார்த்து எல்லாமே மறந்துவிட்டது. உடம்பு அனைத்தையும் பார்த்து வருகிறுது. 

கைலாசா உள்ளிட்ட அனைத்தும் அப்கிரேடு ஆகிறது

கைலாசா உள்ளிட்ட அனைத்தும் அப்கிரேட் ஆகிறது என நித்யானந்தா அறிவிப்பு

3 மாதத்தில் முழுவதும் மாறிய உடலோடு வந்துள்ளேன்

ஏப்ரல் 13 முதல் ஜூலை 13 முதல், என் உடல் , என் மூளை அனைத்தும் மாறியுள்ளது. இது புதிய உடல். பலரும் தவறாக அதை வெளிப்படுத்தினார்கள். இது புதிய உடல். ஒட்டுமொத்தமாக புதிய உடல்

42 ஆண்டுகளுக்குப் பின் புதிய துவக்கம்

42 ஆண்டுகளுக்குப் பின், மேம்படுத்தப்பட்ட புதிய துவக்கத்தை துவக்கிறேன். அனைத்திலும் மேம்படுத்தப்பட்ட புதிய துவக்கம் இது.

அப்கிரேட் ஆன புதிய ஆரம்பம் தொடக்கம்

இப்போது, அப்கிரேட் ஆன புதிய ஆரம்பம் . புதிதாக ஆரம்பிக்கவில்லை. அப்கிரேட் ஆகி புதிதாக ஆரம்பிக்ிகறேன். 40 ஆண்டுகளுக்கு முன், என் குருவிடம் பாலசன்யாசியாக நான் இருந்தேன். 

பரமசிவன் அருள் உங்கள் மேல் விழட்டும்

நீண்ட சமாதியில் இருந்து வந்துள்ளேன். பரமசிவனின் அருள் மழை உங்கள் மீது விழட்டும். 

குருபூர்ணிமா ஆசிகள் வழங்கிய நித்தி

இந்த உலகத்திற்கு வெளியே , உலகத்திற்கு உள்ளே என்ன வேண்டும் என்பதை அறிந்து இந்த நந்நாளில் ஆசி வழங்குகிறேன். 

அனைவருக்கும் ஆசி வழங்கிய நித்யானந்தா

கைலாசாவில் இருந்து பரமசிவாவின் செய்தி இது தான்...


ஆசிகள்... ஆசிகள். ஆசிகள்..

மகிழ்ச்சியை தெரிவித்த நித்யானந்தா

குருபூர்ணிமா நிகழ்வில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி

அனைவரையும் வரவேற்ற நித்யானந்தா

என்னுடைய அன்பு மற்றும் ஆசி அனைவருக்கும். அனைவரையும் வரவேற்கிறேன். 

50 நிமிடம் கழித்து பேசத் தொடங்கிய நித்யானந்தா

நேரலை தொடங்கி சரியாக 50 நிமிடங்கள் கழித்து பேசத் தொடங்கிய நித்தியானந்தா

அருள் ஆசியை தொடங்கினார் நித்தி

தன் பெயரில் உள்ள மந்திரங்களை கூறி மந்திரத்தை தொடங்கினார் நித்தியானந்தா

முழு அலங்காரத்தை மாற்றி மீண்டும் வந்த நித்தியானந்தா..!

கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு யூடியூப்பில் லைவ் வந்திருக்கும் நித்தியானந்தா முதலில் மார்பு நிறையை நகைகளை அணிந்து வந்து தோற்றமளித்தார். தொடர்ந்து திடீரென்று 5 நிமிடம் மாயமான அவர், நகைகளை கழற்றி விட்டு மீண்டும் வந்தார். நகைகளை சுமக்க சிரமப்பட்டதால் ஐந்தாவது நிமிடத்தில் அவரது அலங்காரம் மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

முகம் எல்லாம் தாடி... உதடு எல்லாம் புண்.. புதிய தோற்றத்தில் நித்தியானந்தா

முகம் எல்லாம் தாடியும், உதடு எல்லாம் புண்களும் என புதிய தோற்றத்தில் நித்தியானந்தா இருக்கிறார். அமர்ந்திருக்கும் நித்தியானந்தா பேச ஆரம்பிக்கவே இல்லை, மூச்சு விட சிரமப்படுவது போன்று தெரிகிறது.

Background

Nithyananda LIVE Updates: மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நித்தியானந்தா தனது யூடியூப்பில் லைவ் வருகிறார். அது குறித்தான அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.