“இந்திய நாட்டுக்காக என்னையே உவந்தளிப்பேன்” - கரூர் ஆட்சியர் உறுதிமொழி

தேசிய ஒற்றுமை  நாள் உறுதிமொழியாக, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும்  பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்  என்று கரூர் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Continues below advertisement

 மாரத்தான் ஓட்டம்

Continues below advertisement

கரூர் மாவட்டத்தில் சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை செல்லும் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.  AZADI KA AMRUT MAHOTSAV-பங்கேற்புடன் 75 ஆண்டுகள் சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் அனைத்து பங்கேற்பாளர்களும்  பங்குபெற்று கரூர் மாவட்ட ஆட்சியகம் முன்பாக துவங்கி 3 கிலோ மீட்டர் தூரம் அரசினர் கலைக்கல்லூரி தான்தோன்றிமலை, பாரதிதாசன் 4வது கிராஸ் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.

 


 

இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருடன் இணைந்து கரூர் மாவட்ட ஆட்சியகம் முன்பாக துவங்கி நடைபெற்றது. இதன் மூலம் அனைத்து மக்களும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம். மேலும், சமூக இடைவெளியினை பின்பற்றும் போதும் உடற்தகுதியின் அவசியத்தேவையினை உணர்ந்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இயலும். சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும் உடல்தகுதியினை மேம்படுத்தவும், உடற்பயிற்சியினை பிரபலப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கைமுறையினை பின்பற்றவும் இயலும். இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் பங்குபெற்று தங்கள் உடல்தகுதியினை மேம்படுத்திட வேண்டும்  என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

புகழூரில் மாராத்தான் ஓட்டம்.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர்படை(என்.சி.சி)சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. 

கரூர் மாவட்டம் புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய ஒற்றுமை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மராத்தான் ஓட்டத்தை வேலாயுதம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நெப்போலியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் பை-பாஸ் சாலை,வேலாயுதம்பாளையம் வழியாக முக்கிய சாலைகளில் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சிவசாமி தலைமை வகித்தார். உதவித்தலைமையாசிரியர் விஜயன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் யுவராஜா, உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200க்கும் மேற்பட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் என்.சி.சி ஆபீசர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

 
 

                                                                                                                                                                                                                                                                                                                           

தேசிய  ஒற்றுமை  நாள்  உறுதிமொழி.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  பிரபுசங்கர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியாக, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும்  பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்  என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின்  தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப்  பேண  நான்  இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை  நல்குவேன் என்றும்  உளமாற உறுதி  அளிக்கிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola