தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் பழனி முருகன் (39) , அதே பகுதியில் சந்தை தெருவில் வசித்து வரும் பவித்ரா (27) என்பவரை கடந்த 2011 வருடம் திருமணம் செய்து 4 வயதில் ஆண் குழந்தையும் 9 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.


Eknath Shinde : ஆட்டோ ஓட்டுநர் - முதலமைச்சர்.. உயிரிழந்த குழந்தைகளை நினைத்து கதறியழுத ஏக்நாத் ஷிண்டே!




குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Ajith Watch Video: பின்னால வந்தத கவனிக்கல..! பெண்ணிடம் சாரி கேட்ட அஜித்! சூப்பர் மார்கெட் சிசிடிவி வீடியோ!



இந்த சூழ்நிலையில் இருவரும் அவரவரது வீட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் தாய் பவித்ராவிடம் வசித்து வந்தனர். இந்த நிலையில் பழனி முருகன் தனது குழந்தைகளை பார்க்க இன்று மனைவி   பவித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது குழந்தைகளை பார்க்க விடாமல் பவித்ரா தகராறு செய்ததாக தெரிகிறது.  


Kaali poster Issue: காளி வேடம்.. கையில் சிகரெட்.. ஆவணப்பட இயக்குநர் லீனா மீது டெல்லி காவல்துறையில் புகார்..




இந்த நிலையில் தான் சொந்தமாக வைத்துள்ள துணி கடைக்கு பவித்திர சென்றுள்ளார்.  அங்கு சென்றும் பழனி முருகன் தகராறு செய்துள்ளார். அங்கு தகராறு முற்றிய நிலையில் பழனி முருகன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் இரு கைகளையும் வெட்டி மேலும் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.  அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பவித்ரா சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .மனைவியை தாக்கிய கணவர் பழனி முருகன் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண