தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நண்பனின் கள்ளக்காதலை பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்த நண்பரை கொலை செய்த வழக்கில் கொலையாளி உட்பட 6 நண்பர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு.  மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.



கடந்த மாதம் 27 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்த முகம்மது ஹமீம் என்ற இளைஞர் காணாமல் போன நிலையில் முகம்மது ஹமீம் தந்தை மூக்கன் ராவுத்தர் தேவதானபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள தெண்ணந்தோப்பு கிணற்றில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம்  மீட்கப்பட்டது. இந்நிலையில் காணமல் போன மூக்கன் ராவுத்தரை அழைத்து ஆண் சடலத்தை அடையாளம் பார்த்த போது காணாமல் போன அவரது மகன் முகம்மது ஹமீம் என்பது தெரியவந்தது.



இந்நிலையில் முகம்மதுஹமீம் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில்  கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து தேவதானபட்டி காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்த விசாரணையில் முகம்மது ஹமீம், ரபீக் ராஜா, ஆசிக் என்ற மூவரும் நண்பர்களாக இருந்த நிலையில் ரபீக்ராஜா ஒரு திருமணம் ஆன பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை அந்த பெண்ணின் கணவரிடம் முகம்மது ஹமீம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  ரபீக்ராஜா அவரது மற்றும் ஒரு நண்பரான ஆசிக் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களது  நண்பரான முகம்மது ஹமீமை தென்னந்தோப்பிற்கு வரவைத்து கத்தியால் குத்தி கொலை  செய்து விட்டு அங்கிருந்த கிணற்றில் உடலை வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.



இதனை அடுத்து ரபீக்ராஜா மற்றும் ஆசிக் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு கத்தி கொடுத்தது, கொலையானவரின் இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்ட விற்பனை செய்தது உள்ளிடவைகளில் உதவியதாக மேலும் அவர்களது நண்பர்களான கருப்பசாமி, பின்னி பாண்டி, பாண்டீஸ்வரன், சேக் உள்ளிட்டோரை கைது செய்த நிலையில் மேலும் தங்கப்பாண்டி என்பவரை தேவதானப்பட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  நண்பணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களையும் நீதி மன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை துரித விசாரணையில்  கொலையாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறை துணை கண்கணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்களை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டினர்.


விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


நிர்வாணமாக தெரியும் மூக்கு கண்ணாடியை விற்பதாக கூறி மோசடி - ஒருவர் கைது; மற்றொருவர் ஓட்டம்


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!