தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்பு கோட்டையை சேர்ந்தவர்கள் திவாகர் மற்றும் அரசுமுத்து. இவர்கள் இருவரும் தங்களிடம் நிர்வாணமாக தெரியும் மாய மூக்கு கண்ணாடி மற்றும் ரைஸ் புள்ளிங் கலசம் ஆகியவை தங்களிடம் இருப்பதாக கூறி கும்பகோணத்தை சோந்த மதன், யுவராஜ், சீனிவாசன், வரதராஜன் மற்றும் அவரது நண்பர்களை பெரியகுளம் வரவழைத்துள்ளனர்.
அப்போது அவர்களை சந்தித்த திவாகர் மற்றும் அரச முத்து ஆகியோர் காரில் ஏற்றி கொண்டு மதுரை சாலை மார்கமாக சென்றபோது திடீர் என மதன் மற்றும் நண்பர்களை திவாகர் மற்றும் அரச முத்து ஆகியோர் தாக்கி மாய மூக்கு கண்ணாடியை வாங்குவதற்காக கொண்டுவந்த ரெக்க பணம் 1 லட்சம் பணத்தை பறித்து கொண்டு காரில் இருந்து இறக்கிவிட்டு தம்பி சென்றனர்.
இது குறித்து காவல் துறையினர்க்கு தகவல் கிடைக்கவே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே உத்தவின் பேரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் வழிகாட்டுதலின் பேரில், பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல் துறையினர் ரைஸ் புல்லிங், மாயக்கண்ணாடி மோசடியில் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய அரசமுத்துவை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அரசு முத்துவிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசு முத்து உடன் மோசடியில் ஈடுபட்ட திவாகர் என்பவர் தப்பி ஓடிய நிலையில் காவல் துறையினர் தனி படை அமைத்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
மேலும் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை சேர்ந்த திவாகர் மற்றும் அரசு முத்து ஆகியோருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த மதன் அவரது நண்பர்களுக்கும் மாயகண்ணாடி ரைஸ் புள்ளிங் மோசடி விற்பனை குறித்து எவ்வாறான தொடர்பு ஏற்பட்டது. மேலும் இதன் பின்னணியில் யார் யார் செயல்படுகின்றனர். இதுபோல் பண ஆசை காட்டி மோசடியில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
இன்று தென் மாவட்டத்தில் கனவிக்க வேண்டியவைகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்
- பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!