தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ளது ஆனைமலையன்பட்டி. இந்த கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறிக்க முயன்ற வாலிபரை பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி வெள்ளைகரடு பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரன் (38) பார்கவி(27) தம்பதியினர். ஈஸ்வரன் கம்பத்தில் எலும்பு முறிவு சித்த வைத்தியசாலை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை அவர் சித்த வைத்தியசாலைக்கு கம்பம் சென்று இருந்த நிலையில் மனைவி பார்கவி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்.


Mayiladuthurai leopard: 8வது நாள்: சிறுத்தை எங்கே? மயிலாடுதுறையா? தஞ்சாவூரா? குழப்பத்தில் வனத்துறை




அப்போது இவர் வீட்டின் கிழக்கு கதவு வழியாக மூன்று இளைஞர்கள் வீட்டினில் குதித்து தனியாக இருந்த பார்கவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை பறிக்க முயன்று உள்ளனர். இதனை அடுத்து  கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஈஸ்வரனின் வீட்டை நோக்கி சென்றுள்ளனர்.  பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மூன்று திருடர்களும் தப்பி ஓட முயற்சித்தனர். அதில் ஒருவரை மட்டும் அப்பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை ஒப்படைத்தனர்.


Breaking News LIVE: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தேர்தல் பரப்புரை




மேலும், இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பணப்பரிப்பு சம்பவத்தில் லேசாக காயமடைந்த பார்கவி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட நபரிடம் ஒரு பையில் பணம் இருந்துள்ளது அந்த பணம் பார்கவி இடம் பறிக்கப்பட்டதா அல்லது வேறு எங்கும் பறிக்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த நபருடன் வந்த மேலும் இருவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.