தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள உப்புத்துறையை சேர்ந்தவர் ராஜா (வயது 40). விவசாயி. இவரது மனைவி ஜெயா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். 2 பேரும் மதுரையில் உள்ள பள்ளியில் 8, 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ராஜா வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படடு வந்துள்ளது.


Congress Manifesto : குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000.. இலவச பேருந்து பயணம்.. தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ்.




இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்று பாராமல் ராஜாவின் தலையில் வெட்டினார். இதில்  பலத்த காயமடைந்தார். இதையடுத்து தலையில் துணியை வைத்து கட்டிய ஜெயா அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆட்டோவில் ஏற்றினார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பக்கத்து ஊருக்கு செல்வதாக ஜெயா கூறியுள்ளார்.


இதையடுத்து கருப்பையாபுரம் அருகே ஆட்டோ சென்றபோது ராஜா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து ராஜாவின் உடலை ஆட்டோவில் இருந்து இறக்கியபோது அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். அப்போது அவரது தலையில் வெட்டுக்காயம் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


TN Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா? லேட்டெஸ்ட் வானிலை அப்டேட்..




Meenatchi Kalyanam: மதுரை அரசி மீனாட்சிக்கு திருக்கல்யாணம்! கொண்டாட்டத்தில் மதுரை மக்கள்.. 3000 போலீசார் குவிப்பு


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ராஜாவின் மனைவி ஜெயாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா, ஜெயாவிற்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ஜெயா அரிவாளை எடுத்து ராஜாவை வெட்டியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயாவை கைது செய்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக விவசாயியை அரிவாள் வெட்டி மனைவி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண