தேனி அருகே வீருசின்னம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஊஞ்சாலம்மாள். இந்த தம்பதிக்கு கமலேஸ்வரன் (17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதில், கமலேஸ்வரன் ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில்  வெளியான பொதுத்தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை.


Karnataka CM: ”கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை;முதுகில் குத்த மாட்டேன்” : டெல்லி செல்லும் முன் டி.கே சிவக்குமார்




இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்தில் கமலேஸ்வரன் பிணமாக கிடப்பதாக ஊஞ்சாலம்மாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அங்கு கமலேஸ்வரன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு தலை திரும்பிய நிலையில் பிணமாக கிடந்தார்.


Lyca Productions: திரையுலகில் பெரும் பரபரப்பு... லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை




இதை பார்த்ததும் அவருடைய தாயார் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி  காவல்  நிலைய ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடலை போலீசார் பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


IPS Transfer: 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா அதிரடி..




இந்த சம்பவம் குறித்து கமலேஸ்வரனின் தாயார் ஊஞ்சாலம்மாள் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த படுகொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண