தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் இருளப்பன் (54). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் உள்பட காந்திநகர் காலனியை சேர்ந்த ஒருதரப்பினருக்கும், சிந்துவம்பட்டியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ABP Southern Rising Summit 2023 - சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1




இந்தநிலையில் நேற்று மாலை ஜெயமங்கலம் நால்ரோடு அருகே இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது இருளப்பனுடன் வந்தவர்கள் தப்பிஓடிவிட்டனர். இருளப்பன் மட்டும் அங்கு இருந்தார். இதனால் சிந்துவம்பட்டியை சேர்ந்த தரப்பினர் இருளப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில், நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.


Udhayanidhi Stalin: மக்களவைத் தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு எதிரான சதித்திட்டம் - அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை




இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு இறந்து கிடந்த இருளப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமேஸ் டோங்கரே, பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.


இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ABP Southern Rising Summit 2023 - சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1




இந்த நிலையில்  விசாரணையில், கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது சிந்துவம்பட்டி, காந்திநகர் காலனியை சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருளப்பன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிந்துவம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா, முத்துராஜ், காமாட்சி, கோபி, பாலகிருஷ்ணன், பிரவீன் குமார், சாந்தகுமார், பாலா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


அதன்பேரில் தனிப்படை போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இருதரப்பினர் மோதல் மற்றும் கொலை சம்பவத்தை தொடர்ந்து ஜெயமங்கலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினர் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.