விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா ஓமிப்பேர் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலமாக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டில் உள்ள வவுச்சரில் 5 ஆயிரம் பாயிண்ட் இருப்பதாகவும், அதனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் ரொக்கமாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
VK Sasikala on MGR Birth Anniversary : “மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்”- சசிகலா உறுதி
மேலும் அந்த நபர், விமல்ராஜிடம் அவருக்கு பிளிப்கார்ட் வவுச்சர் ரூ.98 ஆயிரத்தை கூரியரில் அனுப்பி வைப்பதாக கூறியதோடு அதற்காக வங்கி விவரம் சரிபார்ப்புக்காக வரும் ஓடிபி எண்ணை தன்னிடம் சொல்லுமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய விமல்ராஜ், அந்த நபர் கேட்டபடி தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் விமல்ராஜின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.96,960 ரொக்கம் எடுக்கப்பட்டு விட்டதாக அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
தன்னிடம் பேசிய நபர், நூதன முறையில் தனது கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை அபேஸ் செய்திருப்பதை அறிந்து விமல்ராஜ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?
Alanganallur Jallikattu : விடாமல் போராடிய இளைஞர்.. தூக்கியெறிந்த காளை
Vadalur Vallalar Jothi Dharisanam | ’விலக்கப்பட்ட 7 திரைகள்’ தெரிந்த ஜோதி தரிசனம்!
Zee Tamil Controversy | குழந்தைகளின் காமேடி ஷோ! ஜீ நிறுவனம் 7 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்