விழுப்புரம்: திண்டிவனம் அருகே பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், மற்றும் கலசம், விளக்குகளை திருடிசென்றுள்ளனர். சம்பவ இடத்தில திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழமை வாய்ந்த முருகன் கோவிலில் திருட்டு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரப் பகுதியான ராஜாங்குளம் பகுதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம், இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு அருகில் கோவிலை ஒட்டியவாறு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூக்கு கலசம், தூங்கா விளக்கு திருட்டு
இந்த லாரியை பயன்படுத்தி திருடர்கள் லாரி மீது ஏறி கோவிலுக்குள் நுழைந்து கோவிலில் இருந்த மிகப்பெரிய முருகரின் வேல் மற்றும் தூக்கு கலசம், தூங்கா விளக்கு மற்றும் உண்டியலை உடைத்து அதற்குள் இருந்த பணம் மற்றும் கோவிலுக்குள் இருந்த ஒரு அறையை உடைத்து அதிலிருந்து பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து கோவிலின் அர்ச்சகர் திண்டிவனம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டிவனம் போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பழமை வாய்ந்த கோவிலில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.