சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் தேசிய புணரமைப்பு காலனி பகுதியை சேர்ந்த சேதுபதி-பிரியா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்றைய தினம் இரவு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்த பொது மக்கள் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், பிரியாவின் வீட்டில் தண்ணீர் ஊற்றி வைப்பதற்காக இருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை திறந்து பார்த்தபோது, அதில்,  பிரியாவின் கணவர் சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.


தமிழக மீனவர்களை கண்டித்து யாழ்பாண மீனவர்கள் போராட்டம் - தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதாக புகார்



Yearender 2021: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் முதல் மழை நீர் பாதித்த பயிர்கள் வரை திருவாரூரில் நடந்த முக்கிய நிகழ்வுகள்


இது தொடர்பாக கிச்சிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அதில் பிரியா முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரியாவும், சேதுபதியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் சேதுபதி கூலிவேலைக்காக வெளியூர் சென்று வருவார். கடந்த சில மாதங்களாக சேதுபதி கூலி பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்திவந்துள்ளார்.


தூத்துக்குடி ஈசிஆர் சாலையில் முகாமிட்டும் ப்ளமிங்கோ பறவைகள் - பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமா?


இந்த நிலையில், பிரியாவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ் குமார் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளத் தொடர்புக்கு சேதுபதி இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்து பின்னர் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிட திட்டமிட்டிருந்தனர்.  அதன்படி ஒரு சில நாட்களுக்கு முன்பு சேதுபதி கொல்லப்பட்டு பேரலில் அடைத்து வைத்துள்ளனர். நேற்று இரவு இருவரும் சேர்ந்து பேரலை வெளியே எடுத்து செல்ல முயன்றபோது, அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பேரலில் சேதுபதியின் சடலம் இருப்பதை உறுதி செய்தனர். சடலம் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பிரியா கொடுத்த தகவலின் அடிப்படையில், சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் கிச்சிப்பாளையம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.