உலகில் பல்வேறு விதமான நோய்கள் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. அவற்றில் மரபணு சார்ந்த நோய்கள் லட்சத்தில் ஒருவருக்கு வரும் வகையில் மிகவும் அறிய நோய் வகைகள். அப்படிப்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவம் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படி ஒரு நோய் பாதிப்பு தான் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. 


 


பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆஷ்லே ஃபிளவர்(29) என்ற பெண்மணி சமீபத்தில் கருவுற்றார். அவருடைய கர்ப்ப காலத்தில் கடைசி கடத்தில் குழந்தைக்கு ஒரு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அந்த குழந்தைக்கு கேஸ்ட்ரோசிஸ் என்ற நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த குழந்தையின் அடிவயிறு பகுதி சரியாக வளராத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தாய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


அதைத் தொடர்ந்து அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை வெளியே எடுத்த பின்பு தான் ஆஷ்லேவிற்கு தன்னுடைய குழந்தையின் நிலை தெரியவந்துள்ளது. அதாவது அந்த குழந்தையின் அடி வயிறுக்கு கீழ் உள்ள உருப்புகள் மற்றும் பாகங்கள் அனைத்தும் தெளிவாக வெளியே தெரியும்படி இருந்துள்ளது. இதை பார்த்து அவர் சற்று வருத்தம் அடைந்துள்ளார். 




குழந்தைக்கு ஒரு மூன்று வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தாய்-தந்தை ஆகிய இருவருக்கும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்பின்னர் தற்போது குழந்தையை அந்த தம்பதி வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 


 


இதுகுறித்து அவர்கள்,”எங்களுடைய குழந்தை ஒரு மிகவும் வித்தியாசமான நோய் ஒன்றின் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதன் அடி வயிறுக்கு கீழ் இருக்கும் உறுப்புகள் மற்றும் பாகங்கள் அனைத்தும் மறைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து எங்களுடைய குழந்தை தற்போது நன்றாக உள்ளது. நாங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று பார்த்து வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.


 


கேஸ்ட்ரோசிஸ் என்பது மிகவும் அறிய வகை மரபணு சார்ந்த ஒரு நோய். இந்த நோய் பாதிப்பால் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண