சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வரும் 40 வயதான தமிழ் செல்வன் ஆன்லைன் மூலம் மாணவ, ,மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். ஆன்லைன் வகுப்பின்போது, இவர் தொடர்ந்து பல்வேறு மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் மாணவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று மதியம் கல்லூரி வளாகத்தில் சம்பந்தப பட்ட பேராசிரியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள் படத்துக்கு நடிகர் சூர்யா பாராட்டு!
தகவலறிந்து வந்த மதுரவாயல் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் கல்லூரி வளாகத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர். உதவி ஆணையர் ரமேஷ் பாபு மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய தமிழ்ச் செல்வனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து கமிட்டி அமைத்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியபின்பு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
நம்பர் பிளேட்டில் 'SEX' என்ற வார்த்தை - தர்மசங்கடத்தில் புதிய டூ வீலர் உரிமையாளர்கள்..!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
IPL 2022 Retention: இத்தனை கோடியா... தக்க வைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்கள் 27 பேரின் விலை இது தான்!
மேலும் படிக்க: வெறியோடு களம் காணும் வெங்கடேஷ் ஐயர்.. கொல்கத்தா கொலைவெறி பாய்ஸ் இவங்க தான்!
தெறி... மெர்சல்... மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி?