திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி (48) சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி கடந்த 26 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மது குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையில் நேற்று முன்தினம் காலை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் 



மேலும் இந்த சம்பவத்தை குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளிக்க சென்ற தங்கமணியின் உறவினர்களை காவல்துறையினர் அனுமத்திகாமல் ஆட்சியரின் நுழைவு வாயிலின் கதவினை மூடியுள்ளனர். இதனால் தங்கமணியின் உறவினர்கள் நியாயம் கேட்டு சென்ற இடத்திலும் காவல்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இறந்தவரின் முகம் மற்றும் விரல் பகுதிகளில் ரத்தக்காயம் இருப்பதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்த வேண்டும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.




அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதியரசர் பாக்யராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றுது. நீதியரசர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெறும் திருப்தி அடையாத தங்கமணியின் உறவினர்கள் தங்கமணியின் முகம் மற்றும் விரல் பகுதிகளில் ரத்தக்காயம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை வரும் வரையில் உடலை வாங்க மறுத்து தங்கமணியின் உறவினர்கள் அங்கு இருந்து சென்றனர். அதனை தொடர்ந்து நாங்கள் மலைகுறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மதுகுற்றவியல் காவல்துறையினருக்கு வழக்கு கிடைக்கவில்லை என்றால் எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் இனத்தை சேர்ந்த நபர்களை பொய்யான வழக்கு போட்டு கைது செய்து செல்கின்றனர். இதனிடையே நேற்று இரவு 10 மணி முதல் காவல்துறையினர் என்னை பிடித்து வைத்துக்கொண்டு 3 லட்சம் தருவதாகவும் இல்லை எனில் 7 லட்சம்  வரை கொடுப்பதாகவும் காவல்துறையினர் பேரம் பேசி வருகின்றனர்.



மேலும் காலையில் தன்னை காவல்துறையினர் பிடித்து காரில் உட்கார வைத்து வாங்கி கொள்ளுங்கள் எங்களை ஏன் பகைத்து கொள்கிறிர்கள் நாளை பின்னர் நாம் சந்தித்து கொள்ள வேண்டியது வரும் அதனால் நீங்கள் ரூபாய் வாங்கிக்கொண்டு வழக்கை வாபஸ் பெற்று உடலை பெற்று அடக்கம் செய்யுமாறு காவல்துறையினர் சொன்னார்கள். அதற்கு நாங்கள் அதற்கு கேட்டோம் நீங்கள்தான் தங்கமணியை கொலை செய்யவில்லை என்று கூறுகிறார்களே எதற்கு நீங்கள் பணம் கொடுக்கிறிங்கனு கேட்டதுக்கு எல்லாம் ஒரு மனிதாபிமானம்தான் என்று கூறி காவல்துறையினர் எங்களிடம் பேரம் பேசுவதாகவும் இறந்தவரின் மகன் தினகரன் புகார் தெரிவித்துள்ளார்.


காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வீட்டில் இருந்தவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அவர் கையில் 175 லிட்டர் சாராயம் வைத்திருந்ததாக தமிழக முதல்வருக்கு தவறான தகவலை காவல் துறையினரின் உயர் அதிகாரிகள் அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இங்கு இருந்து திருவண்ணாமலை வரையில் காவல்துறையினர் தந்தை தங்கமணியை இருசக்கர வாகனத்தில் தான் அழைத்து சென்றனர். செல்லும் வழியெங்கும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது அதில் என்னுடைய தந்தை தங்கமணியான் கையில் சாராய கேன் இருந்ததா என பாருங்கள் என தெரிவித்தார். தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.