மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் ஒரு விடியோவை பகிர்ந்து சமீபத்தில் மிகவும் ரசித்த விஷயம் என்று எழுதி உள்ளார். அந்த பதிவு வைரலாகி பலரால் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். இவர் மக்களிடையே சமூகவலைத்தள வாயிலாக அதிகம் உரையாடுவார். முக்கியமாக அவர் பதிவிடும் டிவீட்கள் மிக அதிகமாக வைரலாகும். மேலும் பலர் ட்விட்டரில் ஆனந்த் மஹிந்தராவை பின்பற்றுகின்றனர். சமீபத்தில் அவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று பலரை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. அவர் பகிர்ந்த விடியோவில் ஒருவர் எஃப்1 ரேஸில் ஒட்டப்படும் ரேஸ் கார் போன்ற வடிவத்தில் தானே செய்த காரை சாலையில் ஓட்டி செல்கிறார்.
அந்த விடியோ ரோட்ஸ் ஆஃப் மும்பை என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஹெல்மட் அணிந்து கொண்டு எஃப் ரேஸ் கார் போன்ற ஒரு கரை ஒட்டி செல்கிறார். அந்த காரை பார்த்ததுமே நம்மால் அது அவருக்கு கிடைத்த பொருட்களை வைத்து அவரே சொந்தமாக செய்த கார் என்று. இது போன்ற கார்களுக்கு நம் ஊர் சாலைகளில் அனுமதி இல்லை என்றாலும் அவரது முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஏனெனில் இந்த வீடியோவில் முதலில் தெரிய வருவது காரின் பின் புறம்தான். அந்த பின்புறத்தில் இரு பெரிய பால் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த நபர் பாலை விநியோகம் செய்வதற்காகவோ, செய்துவிட்டு திரும்பியோ செல்கிறார் என்பது அதன்மூலம் தெரிய வந்துவிடுகிறது. அந்த விடியோவை வெளியிட்ட ட்விட்டர் பக்கம், "உங்களுக்கு எஃப்1 ரேஸர் ஆகும் கனவு இருக்கும் போது, உங்கள் குடும்பம் உங்களை பால் வியாபாரத்திற்கு உதவச்சொன்னால்…" என்று கேப்ஷன் எழுதப் பட்டிருந்தது. இந்த வீடியோவை 8000 பேர் லைக் செய்திருந்தனர். ஆயிரத்து முன்னூறு பேர் பகிர்ந்து உள்ளனர்.
ஆனால் இந்த விடியோ ஆனந்த் மஹிந்திராவால் பகிரப்பட்ட பிறகு, அவருடைய டீவீட்டை 24 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கின்றனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்த அவர் எழுதியதாவது, "இந்த வாகனம் இந்திய சாலை விதிமுறைகளுக்கு கீழ் வருகிறதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் வாகனங்கள் மீதான இவரது ஈடுபாடு விதிகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த சில நாட்களாகவே நான் பார்த்த மிக சிறந்த விஷயம் இதுதான். இந்த ரோட் வாரியரை காணவேண்டும்!" என்று தன் விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.
Car loan Information:
Calculate Car Loan EMI