பெங்களூருவின் யெலஹங்கா பகுதியில் நாய்க்குட்டிகளைக் குறிவைத்து கொன்றவரை தேடும் பணியில் கர்நாடக காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினரை பொறுத்தவரை கொலை செய்தபோது பதிவான சிசி டிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். 


தனியார் நிறுவன ஊழியர் அனிருத்தா அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளபப்ட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். யெலஹங்கா நியூ டவுன் சர்மராஜபுரா பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே உள்ள மர கிளையில் கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த நாய்க்குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பதியப்பட்ட புகாரை அடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.



அதில், கடந்த இரண்டு மாதங்களில், 3 நாய்க்குட்டிகளை எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அரங்கேறியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், நாய்க்குட்டிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துபவர் ஒருவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். எரித்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகள் பாதி எர்ந்தும் எரியாமலும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இந்த கொலைகள் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.




மேலும் படிக்க: Watch video : உக்ரைன் - ரஷ்யா போர் : பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்.. வெளியான அதிர்ச்சிகர வீடியோ!




இதனால், விலங்குகள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். செல்லப்பிராணிகளை குறித்து நடத்தப்படும் இந்த கொலை சம்பவம் பெங்களூரு மக்கள் சோகத்தில் உள்ளனர். இதனால், தனியார் குடியிருப்பு பகுதிகளை சுற்றி இருக்கும் மக்கள், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.. தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, நாய்க்குட்டிகளை கொன்ற கொலைகாரரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.




உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர