கொரோனா ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால் போதைக்கு அடிமையான நபர்கள் யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தனர். இதனால் பலரது மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதே போல் மோட்டார் சைக்கிளில் சென்று குட்கா - பான்மசாலா போன்ற பொருட்களை டோர் டெலிவரி செய்வது. தூக்க மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்த விற்பனை செய்வது. பதுக்கி வைத்த டாஸ்மாக் பாட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதென, விநோத போதை பழக்கமும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்தது.
மதுரை மத்திய சிறையில் காவலரே கைதுக்கு கஞ்சா சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை கீரைத்துறை, பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மதுரை பெருங்குடி பகுதியில் வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை மடக்கிய காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோது ஆட்டோவில் சுமார் 60 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கி, 5 தோட்டா, ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவை இருந்தது.
அவர்கள் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன், அவரது சகோதரர் சோலை, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து ஆகிய மூவரையும் அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண்குமாரின் மாமா கீரத்துரை முனியசாமி மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்து சோதனையில் 130 கஞ்சா பிடிபட்டது. மொத்தம் 190 கிலோ கஞ்சாவை பிடித்த காவல்துறையின் கஞ்சா விற்பனையில் யார், யார் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் சிலர்...," பூமிநாதனின் மாமா ரவுடி வெள்ளை காளிக்கு தெரிந்த சக்கிமங்கலம் சதீஷ், அவரது மைத்துனர் பிரகாஷ் மூலம் கஞ்சா மொத்தமாக வாங்கி விற்று வந்துள்ளனர். இது தொடர்பாகவும் தனி விசாரணை செய்கிறோம். குற்றவாளி அருண்குமார், சதீஷை தேடிவருகிறோம். அவர்களை பிடித்த பின்னர் கஞ்சா விற்பனை கும்பல் விரைவில் பிடிபடும்” என்றனர்
துப்பாக்கி, கஞ்சா உள்ளிட்டவைகளை கைபற்றி குற்றவாளிகளை கைது செய்தது மதுரையி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறையினரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர் ராஜசேகரனும் பாரட்டினர்.
இதை மிஸ் பண்ணீராதிங்க பாஸ் -'சந்தன பொட்டு, கதம்பம், சம்மங்கி மாலை' டிரான்ஸ்பார்மருக்கு விபூதியடித்த அமைச்சர்.!