திருப்பூரில் கள்ளக்காதலி மற்றும் அவரது 2 மகன்கள் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது 38 வயது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு தரணிஷ் (9), நித்திஷ் (6) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பூமாரியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து திருப்பூர் வந்த பூமாரி தனது இரண்டு மகன்களுடன் சேடர்பாளையம் பகுதியில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.


அப்போது அப்பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்கிற கார்த்திக் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, முத்துமாரி மற்றும் அவரது இரண்டு மகன்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மூன்று உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 




3 பேரையும் கோபால் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கோபாலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று காங்கேயம் படியூர் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கோபால் சைக்கிளுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காங்கேயம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபாலின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் காவல் துறையினரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் கோபால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும், ஏற்கனவே வேறொரு பெண்ணை கொலைசெய்த வழக்கில் கோபால் சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண