தென்னிந்திய ரசிகர்கள் ஒரு இயக்குநரை காதல் தீவிரவாதி என வரையறுக்கிறார்கள் என்றால் அது இயக்குநர் மணிரத்தினம்தான். பாலச்சந்தர், பாரதிராஜா வரிசையில் தனக்கென தனி  பாணியில் காதல் கதைகளை சொன்னவர். 80 களில் இருந்தே தமிழ் சினிமாவை காதல் மழையால் நனைத்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான மௌனராகம் , நாயகன் , அக்னி நட்சத்திரம் ,அஞ்சலி, தளபதி, திருடா திருடா , பம்பாய் , அலைபாயுதே என பல படங்கள் இன்றளவும் பலருக்கு ஃபேவரட். 


அலைபாயுதே போன்று காதலில் க்ளாஸாகவும், தளபதி போன்று சண்டை காட்சிகளில் மாஸாகவும் எடுத்து யார் இந்த இயக்குநர் என்று தமிழ் சினிமா இவரை எட்டிப்பார்த்தது. அப்பொழுது மணிரத்னம் என்னும் மகா கலைஞன் திரையுலகை ஆட்சி செய்ய தொடங்கினார். 


ஒவ்வொரு படமும் இன்றுவரை ஒவ்வொரு காவியம். இன்றைய தலைமுறை இயக்குநருக்கு முன்னோடி என்றால் பலரது நினைவும் மணிரத்னதை எண்ணும். தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளும் படமாய் இருக்காது. பல இளம் இயக்குநர்களும் பாடமாய் இருக்கும். அத்தகைய காட்சிகளில் ஒரு சிற்பத்தின் வடிவத்தை எப்படி சிற்பி செதுக்குவாறோ, அதுபோல் காவியம் பேசும் இவர் கதைகளில்... 




தான் உருவாக்கும் காவியங்களில் இவரைபோல் கதாநாயகிகளை அறிமுகம் செய்யவும் முடியாது. இதுதான் இவர்கள் கதாபாத்திரம் என்று அடக்கமும் முடியாது. அதேபோல், சினிமாவில் கதாபாத்திரம் தேர்வு என்பது மிக மிக முக்கியம். அதில், இயக்குநர் மணிரத்னத்தை அடித்துக்கொள்ள இன்றளவும் ஆளே இல்லை. 


கதையை உருவாக்கும் விதம், கதையை கொண்டு செல்லும் பாதை, கதைக்கான பாடல், கதை எடுக்கும் இடம் என்று எடுக்கும் படத்தை காவியமாக பாவிப்பார். கடவுளாக படைப்பார். எங்கோ ஒரு காட்சிகளில் மணிரத்னத்தில் படங்களில் தன் தலையை காட்டிவிட மாட்டோமா என்று முன்னணி கதாநாயகர்கள் முதல் இளம் கதாநாயகர்கள் வரை கால்கடுக்க இவருக்காக காத்திருக்கின்றனர். 




நானும் இவர்களைபோல் காத்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், படத்தில் நடிப்பதற்காக இல்லை. படத்தை பார்ப்பதற்காக. ஆம். விரைவில் இவரது இயக்கத்தில் வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக.. சாதாரண படத்தை கூட காவியமாக படைக்கும் மணிரத்னம். காவிய கதையை எப்படி எடுப்பார் என்ற ஆவல் ஆழ்கடலை கடந்து செல்கிறது. 


சமூக போராளி : 


90 காலக் கட்டத்தில் தீவிரவாதம், மதகலவரம், வட இந்தியாவில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனை என்று பல சமூக பிரச்சனைகளும் யார் மனதையும் புண்படுத்தப்படாமல் தன் கதைகளை புகுத்தி இருப்பார். இன்றுவரை இவர் ஒரு சார்பு நபர் என்று ஒரு சிலர் இவர் மீது விமர்சனத்தை வைத்தாலும், தான் அப்படிப்பட்டவன் இல்லை என்று இயக்கும் படங்களில் அடிக்கோடிட்டு காட்டி இருப்பார். 


காதல் : 




பல இயக்குநர்களின் படங்களில் காதல் காட்சி இடம்பெறலாம். படமே காதலாக இருந்தால் அதுதான் மணிரத்னம் திரைப்படம். காதலை கூட இவ்வளவு அழகாக வரையறுக்க முடியுமா என்றும், காமம் இல்லாத காதலை கடத்துவதில் மணிரத்னத்திற்கு நிகர் மணிரத்னம்தான். 


இத்தகைய காவிய படைப்பாளிக்கு இன்று பிறந்தநாள்... abp நாடு சார்பாக இயக்குநர் மணிரத்னத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண