’கூட்டு முதலீடு திட்டம்’ என்ற பெயரில் பொது மக்களிடம் 1,100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர்கள் 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். 


சென்னை சி.ஐ.டி நகர் பகுதியில் டிஸ்க் அஸ்ஸெட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் என். உமா சங்கர், என். அருண் குமார், என். ஜனார்தனன, ஏ. சரவண குமார் ஆகியோர் பொது மக்களிடம் பணம் பெற்று நிலம் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நிலம் கிடைக்கும் என நம்பி மாநிலம் முழுவதிலும் இருந்து மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் இருந்தும் சிலர் முதலீடு செய்துள்ளனர். இதில் கிடைத்த 1,100 கோடி ரூபாய் பணத்தை வைத்து 3,850 ஏக்கர் மதிப்பிற்கு அதிகமாக நிலம் வாங்கி குவித்துள்ளனர் நிறுவன இயக்குனர்கள். 



ஆனால், சொன்னப்படி முதலீடு செய்தவர்களுக்கு நிலத்தை தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. அதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பொது மக்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். இதில், நிறுவனத்தின் 4 இயக்குனர்களும் கைது செய்யப்பட்டு உடனே ஜாமினில் வெளியே வந்தனர். 




மேலும் பார்க்க: ABP CVoter Exit Poll 2022| 5 மாநிலங்கள் யாருக்கு?... ABP-C Votersன் மாபெரும் கருத்துக் கணிப்பு




இந்நிலையில், பொது மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை வைத்து அந்நிறுவத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், மக்களை ஏமாற்றி அதில் கிடைத்த பெரும் தொகையை வைத்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதை கண்டறிந்தனர். இதனால், 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்து கைது செய்துள்ளனர். மேலும், இந்நிறுவனத்திற்கு சொந்தமான 207 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 1081 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண