ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் சாட்சியம்.. செப் 16- ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியம் - செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைப்பு.
Continues below advertisement

பென்னிக்ஸ் - ஜெயராஜ் கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
Continues below advertisement
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -ஓபிஎஸ்க்கு இடமில்லை என்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்க தான் சோதனை - ஆர்.பி.உதயகுமார்
வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது தந்தை மகன் உயிரிழந்த போது பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியங்களை அளித்து, ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டது. இதனை வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.