வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த ஜி.ஆர்.பாளையத்தில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். அவருடைய இறுதி ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த துக்க நிகழ்ச்சிக்கு ஊசூர் கொல்லை மேட்டை சேர்ந்த செந்தில்குமார் வயது (39)-என்பவர் தனியார் போக்குவரத்து கம்பெனிகளில் கூலிவேலை செய்பவர் வந்திருந்தார். இவர் குடிபோதையில் இருந்த செந்தில்குமார் இறுதி ஊர்வலத்தில் ஆட்டம் போட்டுவந்ததுள்ளார். அப்போது வேலூரில் இருந்து ஜி.ஆர்.பாளையத்துக்கு அரசு பேருந்து சென்றுள்ளது.


 






 


அந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் நித்தியானந்தன் மற்றும் நடத்துனர் வெங்கட்ராமன் ஆகியோர் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி  விட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது குடிபோதையில் இருந்த செந்தில்குமார் அரசு பேருந்தை பார்த்ததும் ஆவேசமடைந்து பேருந்து நடத்துனர் நித்தியானந்தத்திடம் ரகளை செய்து பேருந்தின் கதவினை கைகளால் பலமாக தட்டியும், கல் மற்றும் தடிகளை எடுத்து பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் ஓட்டுனர் இருக்கை முன்னே இருந்த  வயர்களை பிடுங்கியும் ஹாரன் உயரையும் பிடுங்கியும் வீசியெறிந்தார். மேலும் பேருந்து ஓட்டுனர் நித்தியானந்தனை தடியால் தாக்கியதில் அவர் படு காயமடைந்தார்.


அதனைத்தொடர்ந்து நித்தியானந்தனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜிஆர் பாளையம் மக்கள் ஒன்று திரண்டு வெளியூரில் இருந்து வந்து பேருந்து கண்ணாடி உடைத்து, ஓட்டுனரை தாக்கியதால் எங்கள் ஊர் பெயர் கெடுகிறதே என்று செந்தில் குமாரை கண்டித்தனர். தகவல் அறிந்த அரியூர் சப் இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமார், கேசவன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாரை பிடித்து விசாரித்தனர்.ஆனால் செந்தில்குமார் குடிபோதையில் என்ன பேசுகிறோமோ என்று  தெரியாமல் உளறியுள்ளார். குடிபோதையில் உள்ள நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் காவல்துறையினர் திணறினர்.


 




அப்போது செந்தில்குமாரை அவரது உறவினர்கள் டூவீலரில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டனர்.இதைப்பார்த்த ஜிஆர் பாளையம் மக்கள் குற்றவாளியை கண்டிப்பாக தண்டிக்கவேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அதற்கு போலீசாரோ கண்டிப்பாக குற்ற வாளியை கைது செய்து தண்டிக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து துறையினரை,அழைத்து பேருந்தை அரியூர் காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இதனிடையே ஓட்டுனர் நித்தியானந்தன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது