நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அம்மச்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். ராதாபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று காலை ராதாபுரம் தாலுகா அலுவலக பணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.




கும்பிளம்பாடு அருகே உள்ள கானாவூர் அருகில் வந்து கொண்டு இருக்கும்போது எதிரே  கூடங்குளத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் சாலையை விட்டு கீழே இறங்கி வந்து இரு சக்கர வாகனத்தின் மீதி மோதி உள்ளது. இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுதாகர் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு ஆம்புலன்ஸில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..






அதிவேகமாக சென்ற கார் சிசிடிவி பதிவு இதோ..


மேலும் அதிவேகமாக வந்த கார் பெட்ரோல் பங்க் அருகில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க சாலையை விட்டு கீழே இறக்கியபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறும் காட்சி அங்குள்ள பெட்ரோல் பங்க் இல் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டினாரா, அல்லது வாகனம் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பணகுடி போலிசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.