இந்தியாவில் வேறு மதங்களுக்கு சென்ற கிறித்தவ, இஸ்லாமியர்கள் அனைவரையும் இந்து மதத்திற்கு திரும்பச்செய்ய வேண்டும் என்ற தனது கருத்தை நிபந்தனையற்ற முறையில் திரும்ப பெறுவதாக கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பாக, பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா அமைப்பு (தேசிய இளைஞர் அணி ) 'இந்துமதம் புத்துயிர்' என்ற தலைப்பில் கூட்டம் நடத்தியது. இதில், கலந்து கொண்டு பேசிய அதன் தலைவர் தேஜஸ்வி சூர்யா குறுகிய மனப்பான்மையுடன், வரலாற்றை ஒருதலைபட்சமாக கொண்ட சில கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கிறித்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் கோவா மாநிலத்தில் தேர்தலை சந்திக்கயிருக்கும் பாஜகவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பியது.
என்ன பேசினார்? ,
தேஜஸ்வி சூர்யா," இந்தியாவில் வேறு மதங்களுக்கு சென்ற கிறித்தவ, இஸ்லாமியர்கள் அனைவரையும் இந்து மதத்திற்கு திரும்பச் செய்ய வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை தொடர வேண்டியது நமது கடமை. மேலும், அண்டை நாடான பாகிஸ்தானில் மதம்மாற்ற செய்யப்பட்ட இந்து மக்களையும் நமது வட்டத்திற்க்குள் கொண்டு வர வேண்டும்.
அமைதி, அறிவியல் பார்வை, முன்னோக்கி செல்லும் பாதை போன்ற அம்சங்களைக் கொண்ட இந்து மத கொண்டுள்ளது. அனைத்து வகையான சவால்களை சரிசெய்ய, மக்கள் அனைவரையும் இந்த மதத்துக்குள் கொண்டு வருவதே ஒரே வழி. மடங்களும், கோயில்களும் இலக்கு நிர்ணயித்து மிகப்பெரிய அளவிலான தாய் மதம் திரும்புதலை (Ghar Whapsi) செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தனது பேச்சு தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கியதாக தெரிவத்த அவர், எந்தவித நிபந்தையுமின்றி தனது கருத்தை திரும்ப பெறுவதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் .
முன்னதாக, கட்டாயம் மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை கர்நாடகா அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. கர்நாடகாவில் செயல்படும் அநேக கிறிஸ்த்துவ தேவாலயங்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, மதரீதியாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அங்கு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, கிறிஸ்தவ போதர்களுக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் பங்குபெறுவோருக்கும் எதிரான வன்செயல் சம்பவங்களை Association for Protection of Civil Rights அமைப்பு வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கை ஆவணப்படுத்தியது.
கோவா தேர்தல் நெருக்கடி?
நாட்டின் சிறுபான்மையின் மக்கள் மீது தொடர்ச்சியாக வன்ம பிரச்சராங்கள் செய்பவராக தேஜஸ்வி சூர்யா அறியப்படுகிறார். முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை 'பஞ்சர்வால்லா' மக்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற அவரது அறிக்கை பலரால் கண்டிக்கப்பட்டது, ஏனெனில் இது பெங்களூரில் உள்ள பஞ்சர் ஓட்டும் ஏழை உழைக்கும் முஸ்லீம் மக்களைக் குறிக்கும் வசைச்சொல்லாகும்.
95% அரபு பெண்களுக்கு கடந்த சில நூறு ஆண்டுகளாக ஒருபோதும் உயரின்பத்தோடு புணர்ச்சி ஏற்படவில்லை! ஒவ்வொரு தாயும் குழந்தைகளை பாலியல் செயலாக உருவாக்கியது, அன்பு அல்ல" என்று அரேபிய பெண்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றி சூர்யாவின் 2015 ட்வீட் சஞ்சய் ஜா-வால் விமர்சிக்கப்பட்டது.
மேலும், இரண்டாவது கொரோனா அலையின்போது, கொரோனா வார் ரூமில் பணிபுரிந்து வந்த 17 இஸ்லாமிய ஊழியர்கள்தான் மிகவும் காழ்ப்புணர்ச்சியோடு பேசிய சம்பவம் பேசும் பொருளாக மாறியது. இதுவரை, எதற்கும் நிபந்தையற்ற மன்னிப்புக்கேட்காத இவர், தற்போது கோவா தேர்தல் அரசியல் நெருக்கடி காரணமாக கேட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்