பிரபல ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் OnePlus Nord CE 5G மொபைல்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அந்த மொபைல் உலக சந்தையில் களமிறங்கிய நாள் முதலே அதன் அடுத்த பதிப்பான OnePlus Nord CE 2 5G மொபைல் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கின. இந்த நிலையில் பிரபல ஒன் பிளஸ் நிறுவனம் தனது மொபைல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளி்யிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்நிறுவனம் வருகிற 17 ஆம் தேதி OnePlus Nord CE 2 5G அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்காக சில வசதிகளையும் ஒன் பிளஸ் வெளியிட்டுள்ளது. ரவிருக்கும் OnePlus Nord C 2 5G இல் MediaTek Dimensity 900 சிப்செட் இடம்பெறும் என்று நிறுவனம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.முந்தைய OnePlus சாதனங்களில் இடம்பெறும் Warp Chargingக்கு பதிலாக 65W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது.
OnePlus Nord CE 2 5G மொத்தம் மூன்று பின்பக்க கேமராக்கள் (64-மெகாபிக்சல் பிரதான கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா)மற்றும் 16 இன்ச் அளவிலாம செல்ஃபி கேமரா வசதியும் இடம்பெறும் என தெரிகிறது. 90Hz டிஸ்ப்ளேவுடன் Corning Gorilla 5 பாதுகாப்பு மற்றும் HDR10+ ஆதரவுடன் கூடிய 6.43-இன்ச் திரை வசதிகளுடன் களமிறங்கவுள்ளது. 4,500mAh பேட்டரி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஆண்ட்ராய்டு 11 மற்றும் 1TB விரிவாக்கக்கூடிய நினைவகம் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்கள் .விலையை பொருத்தவரையில் மிட்- பட்ஜெட் மொபைல் போனாக இருக்கலாம் ஏனெனில் முன்னதாக Dimensity 900 சிப்செட்டில் அறிமுகமான Vivo T1x, Oppo Reno 6, iQoo Z5x போன்கள் மிட் பட்ஜெட் ரேஞ்சில்தான் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.