தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது... இதோ!




மருத்துவச்சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து தன் மகன் தற்கொலைக்கு காரணமான, சென்னையை சேர்ந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


சென்னையில் உள்ள சக்ஸஸ் அட்மிஷன் என்ற நிறுவனம் நடத்தி வரும் டாக்டர் சக்திகணபதி என்பவர் தனது மகன் டாக்டர் சிவமணிகண்டனின் மருத்துவ மேற்படிப்புக்காக கல்லூரியில் படிப்பதற்காக இடம் வாங்கி தருவதாக தெரிவித்திருந்தார். அவர் கேட்டு கொண்டதின்படி கடந்த 21.7.20 ம் தேதியன்று ரூ.23 லட்சம், 27.7.20 அன்று ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.33 லட்சத்தை,  தஞ்சாவூர் ஸ்டெல்லா மேரிஸ் நகர் பகுதியை சேர்ந்த திலகவதி பத்மநாபன் மற்றும் இவரது மகன் சிவமணிகண்டன், ஆகியோர், டாக்டர் சக்திகணபதியிடம், கொடுத்துள்ளனர்.


பணத்தை பெற்றுக் கொண்டு அவர்  இடம்  வாங்கி தருவதாக உறுதி அளித்து ரசீதில் கையொப்பமிட்டு வழங்கியிருந்தார். ஆனால், டாக்டர் சக்திகணபதி, கொடுத்த வாக்குறுதியின் படி எனது மகனின் மேற்படிப்புக்கான  இடம் வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்.





தொடர்ந்து பல முறை கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது எனது மகனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.  இதனால் மனமுடைந்த எனது மகன் சிவமணிகண்டன், மேல்படிக்க முடியாததால், மன உளைச்சல் தாங்காமல் கடந்த 30.1.2021 அன்று துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பலமுறை பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு முயற்சி செய்ததன் பேரில் சிறிது சிறிதாக ரூ 19 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதமுள்ள ரூ. 13.06 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.


 மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று எனது மகனின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. எனது மகனும் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டதால், தாய் திலகவதி நிர்கதியனார்.   பணத்தையாவது திருப்பி கொடுப்பார்கள் என பல முறை கேட்டுப்பார்த்தும், உரிய பதில் அளிக்காமல் இழுத்தடிக்கின்றனர்.




எனவே, எனது மகன் மேல்படிப்பு படிக்க  முடியாததால்,  மன உளைச்சலை ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமான டாக்டர் சக்திகணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு சேர வேண்டிய ரூ.13.6 லட்சத்தை பெற்று தர கேட்டுக் கொள்கிறேன் என தஞ்சை எஸ்பி அலுவலகத்தில்,  தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் புகார் மனு அளித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண