உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், அந்த நாட்டின் தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது 36 வயதான ரொனால்டோ கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக ஆடி வந்தார். 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய அவர், இந்த ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். சர்வதேச அளவில் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் ரொனால்டோ பற்றிய எந்த செய்தியானாலும் அவை வைரல் ரகம்தான்.  இந்நிலையில், கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கும் அவரது காதலி ஜார்ஜியான ரோட்ரிக்ஸ்க்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது காதலி பகிர்ந்துள்ளார். 


ரொனால்டோ, அவரது காதலி ஜார்ஜியானா, அவர்களது நான்கு குழந்தைகளான 11 வயதான கிறிஸ்டியவோ ரொனால்டோ ஜூனியர், 4 வயதான ஈவா மரியா தாஸ் சான்டோஸ், மாடோ ரொனால்டோ மற்றும் 3 வயதான  அலானா மார்டினா தாஸ் சான்டாஸ் அவெய்ரா ஆகியோர்தான் அவரது குடும்பம்.  நான்கில் மூன்று குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகள், இதில் ஏற்கனவே ஈவாவும், மாடோவும் இரட்டைக் குழந்தைகள். கடந்த 2017-ம் ஆண்டு ஜார்ஜியானாவுக்கும் - ரொனால்டோவுக்கும் அலானா மார்டினா என்ற பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில், இப்போது கர்ப்பமாகியுள்ள ஜார்ஜியானா, இரட்டை குழந்தைகளை எதிர்ப்பார்த்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். ரொனால்டோவும், ஜார்ஜியானாவும் பகிர்ந்த இன்ஸ்டாகிரம் பதிவில், ரொனால்டோ ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண