Thanjavur police: பொது மக்களிடம் இருக்கக் கூடிய போதை பழக்கத்தினை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள மீம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மீம் என்பது மிகவும் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த மீம் குறிப்பாக போதைப் பழக்கத்தில் இருப்பவர்களை விழிப்படையச் செய்ய வெளியிடப்பட்டுள்ள மீம் மிகவும் நகைப்பூட்டும் படியும் உள்ளது. அதாவது பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள ’வாரிசு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இவர் பேசியது அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருந்தது. குறிப்பாக சமூக வலைதளத்திலும் பல்வேறு மீம் தளங்கள் தில்ராஜு பேசிய விதத்தினை மையமாக வைத்து பல மீம்களை உருவாக்கி பகிர்ந்து வந்தனர். இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட மீம்கள் நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனடிப்படையில் தஞ்சை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு மீமில்,
டியர் டோப்..!
கேஸ் வேணுமா? கேஸ் இருக்கு..!
ஃபைன் வேணுமா? ஃபைன் இருக்கு..!
ஜெயில் வேணுமா? ஜெயில் இருக்கு..!
ஃபைனலி,
பேங்க் அக்கவுண்டை ஃப்ரீஸ் பன்னனுமா? அதுவும் இருக்கு..!
இவ்வாறு அந்த மீமில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெரும்பாலான இடங்களில் இவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து பான்பராக், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நகரப் பகுதிகளுக்குள் குறைய காரணமாக உள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட மருத்துவர் ரமேஷ்பாபு கடந்த பிப்ரவரி 2021 முதல் 2022 நவம்பர் வரை மாவட்டத்தில் உள்ள உணவு சார்ந்த வணிகர்கள் 85 சதவீதம் பேருக்கு புதிய உரிம மற்றும் புதுப்பித்தல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்த ஆய்வில் உணவுகளின் நடைபெற்ற சோதனையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் 1571 எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது” என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதிலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைப்பதிலும், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் உணவில் கலப்படம் இருந்தாலோ, குட்கா விற்பனை செய்யப்பட்டாலோ, எவ்வித தயக்கமும் இல்லாமல் பயப்படாமல் தகவல் கொடுத்தால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உணவு வணிகர்கள், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான உணவுகளை வழங்க முன்வர வேண்டும். அதேபோல் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் முதல் இடத்தினைப் எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை செயல்படுவதாக கூறப்படுகிறது.