கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் மனைவி தன்னுடன் வாழாமல் இருப்பதற்கு கொளுந்தியா தான் காரணம் என்று, மிரட்டுவதற்காக அவரது 11 குழந்தையை கடத்திச் சென்ற பூம்பூம் மாட்டுக்காரர் உள்ளிட்ட இருவரை போலீஸார்  நாகர்கோவிலில் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.


தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று பூம் பூம் மாட்டை வைத்து வித்தை காட்டி, குறி சொல்லும் தொழிலைச் செய்துவருபவர் நாகர்கோயிலை சேர்ந்த மைக்கேல் ராஜ் (39). இவருக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கொட்டியப்படுகை கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி (29) என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணமாகி இத்தம்பதியினருக்கு ஒரு மகன், நான்கு மகள்கள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.



இதெல்லாம் நியாயமா...! மனைவியை மிரட்ட கொழுந்தியா குழந்தையை கடத்திச் சென்ற பூம்பூம் மாட்டுக்காரர்!


இந்நிலையில், மீனாட்சி கடந்த 2 ஆண்டுகளாக, குடும்ப பிரச்சனை காரணமாக,  தனது கணவரைப் பிரிந்து தனது 4 மகள்களுடன் தனது சொந்த ஊரான கொட்டியபடுகையில் வசித்து வருகிறார். சக்தி என்ற 8 வயது மகன் மட்டும் மைக்கேல் ராஜிடம் வளர்ந்து வருகிறார். நாகர்கோவிலில் தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு மைக்கேல் ராஜ் பலமுறை அழைத்தும் அதற்கு மீனாட்சி சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது.


இந்நிலையில், தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு அந்தோணி மேரி (13) என்ற அவரது மூத்த மகள் அண்மையில் தனது தந்தை மைக்கேல் ராஜை ஃபோனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதன்பேரில், தன்னுடைய குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக உறவினர்கள் சிலரோடு மைக்கேல்ராஜ் அக்டோபர் 15-ம் தேதி கொட்டியப்படுகை வந்துள்ளார். ஆனால் அன்றைய தினம் மீனாட்சி தனது மூத்த மகளை மட்டும் தனது தங்கை நாகம்மாள் (23) வீட்டில் அவரது பராமரிப்பில் விட்டுவிட்டு ஏனைய 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, கணவரிடம் சிக்கி கொள்ள கூடாது என்று மேல்மருவத்தூர் சென்றுவிட்டார்.


தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் காணாததால் கோபமடைந்த, அப்பகதியிலுள்ளவர்களிடம் கேட்டு பார்த்தார்.யாரும் உரிய பதில் தரவில்லை. பின்னர் ஒரு குழந்தை மட்டும் கொளந்தியா, நாகம்மாள் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரப்பட்ட மைக்கேல்ராஜ்,  இதற்கெல்லாம் நீதான் காரணம் எனக்கூறி தனது கொழுந்தியாள் நாகம்மாளை திட்டி, நான் மனைவி,குழந்தைகள் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றேன். நீ மட்டும் சந்தோஷமாக வாழ்கின்றாயா, நான் எப்படி குழந்தை இல்லாமல் தனிமையில் வாழ்கின்றனேனோ அதே போல் நீயும் வாழ வேண்டும் என்று,  நாகம்மாள் எவ்வளவோ தடுத்தும், தனது குழந்தைகளைக் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு அவரது குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறி கூறி முகமது சுலைமான் என்ற அவரது 11 மாதக் குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டார் மைக்கேல் ராஜ்.




இதுபற்றி நாகம்மாள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் அக்டோபர் 17- ம் தேதி புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  தஞ்சாவூர் எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபனேனி, உத்தரவின் பேரில், எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையிலான எஸ்ஐ ராமமூர்த்தி, எஸ்எஸ்ஐக்கள் ராஜா, சுந்தர்ராஜன், தலைமை காவலர்கள் பாலு, நாடிமுத்து, ஜனார்த்தனன், கவிதா, சங்கீதா ஆகியோர் கடந்த 6 நாட்களாக மதுரை, திருப்பத்தூர், திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய இடங்களில் விசாரணை செய்து கடத்தப்பட்ட குழந்தை,  சுலைமானை நாகர்கோவில்  மீட்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக, மைக்கேல் ராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் ஆறுமுகம் (23) ஆகிய இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்ட தனிப்படையினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.