Chennai Student Death: அறைக்கு படிக்கச் சென்ற மாணவி.. பிணமாக வெளியே வந்த அவலம்.. என்ன நடந்தது..?

தஞ்சாவூரில் கல்லூரி மாணவி அறையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் பள்ளியக்ரகாரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சடகோப ராமனுஜம். இவரது மகள் பவித்ரா. இவர் சென்னை ஜமீன் பல்லாவரம், வேம்புலி நகர் 3 ஆவது தெருவில் உள்ள 2 மாணவிகளுடன் தங்கி அங்குள்ள கல்லூரியில் பி.பார்ம் 4  ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் படிப்பதற்காக படுக்கை அறைக்கு சென்ற, பவித்ரா நீண்ட  நேரம் ஆகியும் வெளியே வரவில்லை எனத் தெரிகிறது.

Continues below advertisement


இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த நபர்கள் கதவை உடைத்து திறந்து பார்த்த போது பவித்ரா அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார்  மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola